164
செயலும் செயல் திறனும்
ஒலிக்கும் ஒளிக்கும் எவ்வாறு ஒலியலையும் ஒளி அலையும் ஆக இரண்டு வகையான அலைகள் இருக்கின்றனவோ, அர்வாறே நம் உள்ளத்திற்கும் அறிவிற்கும் இருவேறு வகையான அலைகள் உண்டு.
- ஒன்று எண்ண அலை; மற்றது அறிவு அலை;
- எண்ண அலை (உள்ள அலை) உணர்வு எனப்பெறும்.
- அறிவு அலை அறிவு எனப்பெறும்.
- உடல் அலை (அ) அல்லது அசைவு செயல் எனப்பெறும்.
இம்மூன்று செயற்பாடுகளுக்கும் மூளைதான் கருவியாக இருக்கிறது.
- 6. மொத்த இயக்கங்கள்
எனவே, நம் ஒவ்வொருவருக்கும் மொத்தம் ஆறு இயக்கங்கள் உள்ளன. உடல், உள்ளம், அறிவு - ஆகிய ஒவ்வொன்றுக்கும் இரண்டிரண்டு இயக்கங்களாக ஆறு இயக்கங்கள் உள்ளன. அவற்றை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
- உடலுக்கு :
- 1. விரும்பா இயக்கம் அல்லது தன்னியக்கம்
- 2. விருப்ப இயக்கம் அல்லது செயல்.
- உள்ளத்திற்கு :
- 1. தோன்றும் எண்ணம் அல்லது நினைவு
- 2. தோற்றும் எண்ணம் அல்லது எண்ணுவது அல்லது நனவு
- அறிவிற்கு :
- 1. தானாய் அறிய வருதல் அல்லது அறிவு
- 2. நாமாய் அறிதல் அல்லது பகுத்தறிவு
- (இது நம் பொறி, புலன்களால் அறிதல்)
- 7. ஏழாவது இயக்கம் ஒன்று உண்டா?
இவ்வாறு இயக்கங்களுக்கும் மேலான அல்லது வேறான ஏழாவது இயக்கமும் அதற்கான ஓர் உணர்வு அலையும் உண்டு. அதுவே மெய்யுணர்வு அல்லது மெய்யறிவு.
மெய்யுணர்வின் அல்லது மெய்யறிவின் காரணியாக - மூலப் பொருளாக நிற்பதே இறைமை. இவைபற்றியெல்லாம் விரிப்பின் பெருகுமாகலினாலும், அவை காலத்தால் உணரப்பெற வேண்டிய பேரறிவு ஆகலாலும், அவ்வகண்ட அறிவின் ஒரு சிறு கூறே இங்குத் தேவை கருதி விளக்கப் பெறுதல் போதும் ஆகையினாலும், இவ்விளக்கங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.