பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

251



என்று முடிவு செய்வது தேர்வு.

கருவி என்பது, அச்செயலுக்குரிய பொருள், மூல துணைக்கருவிகள், வினையாட்கள் ஆகிய பொருள்கள். இவ்வளவு பொருள் வேண்டும்; இத்தனைப் பெருங்கருவிகள். சிறுகருவிகள், இன்னின்ன வினைக்கு இவ்வத்திறனுடைய ஆள்கள் வேண்டும் எந்பதும் அவர்களை அணியப்படுத்துவதும் ஆகும்.

தொடக்கம் என்பது அவ்வினையைத் தொடங்கும் இடம் காலம் இவற்றை ஆராய்ந்து செயலைத் தொடங்குவது.

இயைபு என்பது, அசெயலை இன்னின்ன வகையால் இன்னின்ன துணைவினைகளால், இவ்விவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும்.

முடிவு என்பது, அச்செயலை இந்திந்த முடிவுத் திறனுடன் செய்து நிறைவு செய்வது.

பயன் என்பது, எந்தக் காரணத்திற்காக, அச்செயலைத் தொடங்க எண்ணினோமோ அது முற்றுப் பெற்று, அதன் விலைவைத் தருவது.

10. இனி செயல் என்பது பொதுவானது; எல்லார்க்கும் உரியது; எல்லாராலும் செய்யப் பெறுவது. செயல்திறம் என்பது ஒரு செயலைத் திறம்பெறச் செய்வது; சிறப்பானது, ஒரு சிலராலேயே செய்ய இயல்வது. எல்லாரிடமும் செயல் இருக்கலாம் திறம் இருத்தல் அரிது. ஒரு செயலை ஒட்பம் நுட்பம், திட்பம், செப்பம் ஆகியதுண்திறன்களோடு இடைமுறிவின்றித் தொய்வின்றி, நெகிழ்ச்சியின்றி, இடையீடின்றிப் பழுதின்றிப் பயன்தருமாறு செய்வது அரிதினும் அரிதாகும். அவ்வாறு செய்யத் திறன் பெற்றவர்களே எல்லார்க்கும் வழிகாட்டிகளாகவும் முந்து திறன் உடையவர்களாகவும் கருதப் பெறுவர்.

கருமம் செயலொருவன் கைதுவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)


முற்றும்