பக்கம்:செவ்வானம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#10 செவ்வாணம் கதவை யாரோ தட்டுவதுபோல் கேட்டது விட்டு விட்டு ஒலித்தது. தயங்கியும் துணிந்தும் விடாமுயற்சியுடன் அந்தக் காரியத்தை எவரோ வெகுநேரமாகச் செய்து கொண்டிருக்க வேண்டும். தனது கவனத்தில் அது பதிய இவ்வளவு நேரம் பிடித்திருக்கிறது என்றும் புரிந்தது அவனுக்கு. தட்டிப்பார்த்து அலுத்துப்போய், சென்று விடுவார்கள் யாராக இருந்தாலும் சரியே தொந்தரவு கொடுக்காமல் தொலைந்துபோனால் சரிதான் என்று நினைத்து அசையாமல் கிடந்தான் அவன் வெளியே நின்று தட்டிய பொறுமைசாலியோ தட்டுங்கள். திறக்கப்படும் என்ற வேதவாக்கிலே அழுத்தமான நம்பிக்கை உடையவர் போலும் அதனால் தளர்வுறாமல் தட்டும் சப்தம் எழுந்தது 'யார் இந்தச் சனியன், இங்கே வந்த எழவெடுக்கிறது? என்று முனங்கியபடி எழுந்தான். நிமிர்ந்து உட்கார்ந்து எழுந்து நடப்பது பெரிய சாதனையாகத் தோன்றியது அவனுக்கு சிரமத்துடன்போய் கதவைத் திறந்து யார்?' என்று எரிச்சலாகக் கேட்க வாயெடுத்தான். எதிரே நின்ற குமுதத்தைக் கண்டு திடுக்கிட்டான். அவ்வேளையில் அவன் அவளை எதிர்பார்க்கவேயில்லை. சில வாரங்களுக்கு முன்பு அவள் எரிந்து விழுந்து இனி இப்பக்கம் திருப்பிப் பார்க்கவே மாட்டேன்' என்று சொல்லிப் போனவள் தனது சொல்லைக் காப்பாற்றி விடுவாள் என்ற நம்பிக்கையைத்தான் கொடுத்தது ஒடிய ஒவ்வொரு தினமும், இவனால் ஒன்றும் ஆகாது என்று தன்னை மறந்திருப்பாள் என எண்ணியிருந்தான். அவளிடம் தான் நடந்துகொண்ட முறை அபலைக்கு அனுதாபம் காட்டி உதவிபுரியும் சகோதரத் தன்மையாகயிருக்கவில்லை. துயருற்ற பெண்ணின் வேதனையை அதிகப்படுத்தும் இரக்கமற்ற செயலே யாகும் என்று அவன் மனம் குறுகுறுக்கும். அவளிடம் அதற்காக மன்னிப்புகோர வேணும் என்றுகூட எண்ணினான். அவளிருக்கு மிடம் தெரியாது என்பது போக, அவளுடன் ஏன் உறவு கொண்டாட வேண்டும் அதனால் வீண்பழியும் அநாவசியத் தொல்லையும்தான் ஏற்படும் என்ற எண்ணமும் எழவே அவன் எதுவும் செய்யவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/112&oldid=841320" இலிருந்து மீள்விக்கப்பட்டது