பக்கம்:செவ்வானம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 34 செவ்வானம் ஆனால் அவள் பயந்துவிடவில்லை. பன்றிகளுக்கு சதா சாக்கடை ஞாபகம் தானிருக்கும். இது பன்றிருக்குரியதல்ல. சிந்தனைக் கருத்துகள் நிறைந்த உயர்ந்த விஷயம். சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு இனிய விருந்து' என்றாள் அவள். விரும்பாத விதத்திலே பேச்சு திசை மாறுவதை அறிந்த அவர் பொங்கிய தமது உணர்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்துக் கொண்டார் கோபித்தால், எரிந்து விழுந்தால், தான் எண்ணி வந்த காரியத்தைச் சாதிக்க முடியாதே என்ற எண்ணம் எழுந்தது தான் காரணம், இருப்பினும் அவர் குணம் தலைதூக்காமல் போகுமா? "பரவாயில்லையே! தாமோதரன் ட்யூஷனோ? நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாயே! என்றார் அவர் பேசுவதற்கு எனக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை அதுசரி. நீங்கள் இங்கே வந்த காரணம்? அவள் கேள்வி காதில் விழாதவர் போல் பேசினார் அவர்:'நீ தாமோதரனின் கட்டாய ரசிகை போலிருக்கு' அப்படியென்றால்? 'அவன் எழுதுகிறவற்றை ரசித்தே ஆகவேண்டும் - படித்து ரசித்து, ஆகா, அபாரம் என்று பாராட்டாமல் தீராது - என்ற நிர்ப்பந்த நிலையில் இருப்பவள் என்று தான் அர்த்தம் எனக்கூறி நகைத்தார் அவர் தனது பேச்சுத் திறமையில் அவருக்கே மிகுந்த பெருமை ஏற்பட்டு விட்டதனால் அவர் சிரிப்பு அதிகரித்தது. குமுதத்திற்குக் கோபம் வந்தது. அழையாத சனியனாக வந்து அகம்பாவமாகப் பேசிக்கொண்டிருக்கிறானே இந்த மனிதன் என்ற எரிச்சலை எப்படிக்காட்டித் தீர்ப்பது என்று புரியாமல் உட்கார்ந்திருந்தாள். அப்போ நான் சொல்றது சரிதான்னு தோணுது என்று எக்காளமிட்டார் சிவசைலம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/136&oldid=841346" இலிருந்து மீள்விக்கப்பட்டது