பக்கம்:செவ்வானம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 செவ்வானம் அவன் குமுறினான். முதலாளியும் அவரது நண்பர்களும் நினைத்தபடி திருவிளையாடல்கள் புரிந்து வாழ்கிறார்கள். அவர்களின் பணபலம் அவற்றையெல்லாம் மறைத்துவிடுகிறது. ஆனால் பணமில்லாத காரணத்தினால் சரியாக வாழ முடியாதவர்கள் அவதியுறுகிற வேளையில் அவர்கள்பேரில் பிறரது பொறாமையும் வம்பும் வீண் புகைச்சலும் அநாவசியப் பழிகளாக அமைதியைக் கெடுக்கும் குற்றச் சாட்டுகளாகப் படிகின்றன. பழிவாங்கும் முறையிலே என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடிகிறது, பணத்தின் துணைகொண்டு. தாமோதரன் கண் முன்னாலேயே தகத்தகச் செவ்வானம் மங்கி மறைந்து கருமைபெற்றது. இரவு வந்துவிட்டது. படுத்தும் எழுந்து உட்கார்ந்தும் மரங்களில் பார்வையை நிறுத்தியும், வானிலே விழிகளை ஏவியும் பொழுதைக் கழித்த தாமோதரன் எழுந்து நடந்தான். இப்படிக்காலக்கொலை செய்தும் அமைதி பிறக்கவில்லை. அவன் மனதில் அர்த்தமற்ற கலவரம் புரண்டது. அவன் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து, வாழ்க்கையே வியர்த்தமாகி விட்டதுபோன்ற ஒரு உணர்வு மெதுமெதுவாய் தலைதூக்கிக் கொண்டிருந்தது. அவன் தனது அறையின் தனிமையை அந்நேரத்திலே விரும்பவில்லை. அறைக்குப் போகாமல் அலைந்தான். இரவை எங்கே கழிப்பது? நண்பன் ரகுராமன் வீட்டிற்குப் போகலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வேளையில் அணு அணுவாய்க் கொல்லும் தனிமையை விட நண்பனின் தொண தொணப்பை சகித்துக்கொள்ளவும்: அவனதுபோதனைகளைக் கேட்கவும் நேரிடும்; எனினும் பரவா யில்லை என்று தீர்மானித்தான். அதனால் நண்பன் வீட்டை நாடிச் சென்றான். - எதிர்பாராத அதிதியாக வந்த தாமோதரனைக்கண்டு ஆச்சர்யமடைந்த ரகுராமன் நானே உன்னைத் தேடி வரணுமென்று எண்ணினேன். உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சே. அதனால்தான் என்று வரவேற்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/148&oldid=841359" இலிருந்து மீள்விக்கப்பட்டது