பக்கம்:செவ்வானம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 செவ்வானம் சரி. நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அவன் இயல்பாக ஒண்னுமில்லையே! என்று கூறிய பதில் அவளுக்குள் சிரிப்பைத் துண்டியது. அப்படியானால் நான் வயிறெறிந்தபடி போக வேண்டியது தானா? என்று கேட்டாள். 'ஏன் நான் தான் யோசித்துச் சொல்கிறேன் என்றேனே அதற்குள் அவசரப்பட்டால்! 'உங்கள் தனி நபர்க் கமிட்டியின் முடிவான அறிக்கை வெளியாக எத்தனை வருஷமாகும்? என்றாள் அவள். 'நீ சிரிக்கத் தெரிந்த உள்ளம் பெற்றிருப்பதற்காக மகிழ்கிறேன் அதற்காகப் பாராட்டலாம். 'உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் பாராட்டுதல்கள் மட்டுமே வாழ வகை செய்து விடுவதில்லையே' என்று கூறிப் பெருமூச் செறிந்தாள் அவள். நீங்கள் யோசித்தே சொல்லுங்கள் நான் போய் வருகிறேன்' என்று கிளம்பினாள் குமுதம், 'இப்போ இங்கே வந்த விசேஷம்? அந்தக் குறிப்புத் தாள்களை வாங்கிக் கொண்டு போகவா? என்று அவன் அக்கறையாக விசாரித்தான். அவன் கிண்டல் செய்கிறானோ என்று சந்தேகித்தாள் அவள். 'இவ்வளவு சொல்லியும், இத்தனை அலட்சியமாக இருக்கிறானே இவன் என்ன நன்மையைச் செய்துவிட முடியும் நமக்கு? என்ற எண்ணம் எழாமற் போகவில்லை அவள் மனதில், 'நாம் வாழ்வதற்கு இவன் என்ன வழியைக் காட்டி விடப்போகிறான்! பல துறைகளிலும் அடிவைத்து அனுபவம் பெற்றும் முடிவில் மனக்கசப்பும் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்ற வழியும் தானே பிறந்தன நமக்கு வாத்தியார் வேலை பாரு, அதைச் செய், இதிலே முயற்சி பண்ணப்படாது என்ற ரீதியில் தான் எதையாவது சொல்லி வைப்பான். இல்லையெனில் பணக்காரனாக யாராவது ஒருவனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/92&oldid=841461" இலிருந்து மீள்விக்கப்பட்டது