பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

00 8 சமூக சேவகி சாருபாலா t சமூக சேவகி சாருபாலாவுக்கு சளி, ஜூரம் 'சாந்தி பவனம் அல்லோலகல்லோலப்பட்டது-இன்கம்டாக்ஸ் ஆபீசர் கோதண்டராம ஐயருடைய ஏக புத்திரி சாருபாலா; அமர்க்களமாகத்தானே இருக்கும். அதிலும் சாருபாலா, சமூக சேவை செய்து பிரபல்யமடைந்து கொண்டிருந்து குமாரி. முகிலுக்கிணையான குழல்; அது தழுவியிருந்த வட்ட நிலவு முகம்; பிறை நெற்றி, பேசும் கண்கள், துடிக்கும் அதரம், அங்கம் தங்கம், நடை நாட்டியம், பேச்சோ கீதம் வயது இருபத்திரண்டு; படிப்பு இன்டர். அலங்கார மூக்குக் கண்ணாடி, அலங்காரப் பை, அதிய லங்கார பூட்ஸ், வைரத்தோடு. கையில் ரிஸ்ட்வாட்சு, கழுத் தில் மெல்லிய சங்கிலி- எப்போதும் புன்னகை; எவரிடமும் இன்முகம் - சாருபாலா அந்த நகரில் ஒரு காட்சியாகி விடாம லிருக்க முடியுமா! - . . "வருமானம் மிகவும் குறைவு. இந்த வருஷம் மிகுந்த நஷ்டம்' என்று குறையைக் கொட்டிக் கொண்டு, ஆபீசரு டைய கருணையைப் பெற்றுக் கொண்டு வருவோம் என்று சகுணம் பார்த்துக் கொண்டு கிளம்பிய கஞ்சனெல்லாம், அந்த கனகப்பதுமையைக் கண்டதும், தன் வியாபாரப் பெரு மையைக் கூறிவிட்டு வருவர் என்றால், பார்த்துக் கொள்ளுங் களேன். அந்தச் சுந்தரி கிளப்பிய சூறாவளியின் தன்மையை. கோதண்டராம ஐயர், எப்போதும் தன் 'பார்யாள்' கீறிய கோட்டினைத் தாண்டா தவர், அந்த அம்மாளுடைய இராசியால்தான், தனக்குப் பெரிய பதவி கிடைத்தது என்