பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாருபாலா

107

"என் சினேகிதிகளெல்லாம் என்னைக் கேலி செய்யறா! உனக்கென்னடி சாரு, நல்ல ஆப்பிள் போல இருக்கறேன்னு"

"கோல்டன் ஆப்பிள். கோல்டன் ஆப்பிள்...! அதாவது...அதாவது..."

“அதாவது இதாவது! கேலி பேசறதுக்காகவா உம்மை இங்கே வரச்சொன்னா?..."

"நோ! நோ! மன்னிச்சுடுங்கோ... ஏதோ ஒருமாதிரியா இருக்கு...எனக்குக் கொஞ்சம் தேர்த்தம்..."

"வெந்நீரா...

"ஆமாம்... எப்பவும் நான் சோடா... இல்லாவிட்டால் வெந்நீர்தான் சாப்பிடுவது வாடிக்கை... இராத்திரியிலே மட்டும் ஐஸ்வாட்டர் சாப்பிடுவேன்...

"இப்போ, வெந்நீர்தானே வேணும்...

"இருந்தா...கொடுக்கச் சொல்லுங்க..."

"இருந்தா கொடுங்களா...சத்திரம் சாவடியானால் கூட வெந்நீர் கிடைக்குமே, எங்க ஆத்தைப் பத்தி ரொம்ப மட்டமான அபிப்பிராயம்போல இருக்கே உங்களுக்கு..."

"ஐயையோ... தப்பா எடுத்துண்டிங்களே...”

"இதோ ஒரு விநாடியில் கொண்டு வரேன்... சித்தை உட்காருங்கோ... வந்ததிலே இருந்து நின்னிண்டே இருக்க றிங்களே..."

"பரவாயில்லே... பரவாயில்லே... கிளாசிலேயே எனக்குப் பழக்கம் ...அதாவது, எப்பவும் வாக்கிங், டென்னிஸ், இப்படி..."

உள்ளே சென்றாள் சாருபாலா, டாக்டருக்கு வெந்நீர் கொண்டுவர!

டாக்டர், திகைத்துப் போய் நாற்காலியில் உட்கார்ந்தார்; ஜுரம் வரும் போலிருந்தது.