பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சமூக சேவகி களே இப்படித்தான் இருக்கா..." என்று அங்கலாய்த்துக் கொள்வது வாடிக்கை. சாரு, பல பேருக்குப் பெரும் பிரச்னையாகி இருந்து, வந்த திருமண விஷயத்தைத் தானே தீர்த்துவிடத் தீர்மா னித்துவிட்டதாகக் காட்டுவதுபோல, டாக்டர் இரகுராமன் போட்டோவைத் தன் மேஜைமீது வைத்து 'ஜரிகை' மாலை போட்டு மகிழ்ந்தாள். ஆறு கிராமங்களிலே அறிய சேவை! பதினெட்டுத் திருக் குளங்களிலே பாசி எடுத்து, படிக்கட்டுகளைச் சுத்தம் செய்து இலட்சோப லட்சம் ஜனங்களுக்குச் சௌகரியம்! ஓலைக் கொத்து குடிசைகளில் இருந்துகொண்டு, சுத்தமாக சுகா தார முறைப்படி வாழத் தெரியாமல், மௌடிகத்திலே மூழ்கிக் கிடந்த ஜனங்களுக்கு இதோபதேசம்! கிராமத்துக் குழந்தை களுக்குக் கோலாட்டம் டான்சு ஆகியவைகளைக் கற் றுக் கொடுத்து பல கிராமங்களிலே ஆனந்தமான பொழுது போக்கு ஏற்பாடு செய்து தந்த பெருமை! இவ்வளவும் சாதித்தது யாருன்னு எண்ணிண்டிருக்கிறீர். இதோ, சாட் சாத் ஜானகி போல, டாக்டர் இரகுராமன் பக்கத்தில் அமர்ந் திருக்கும் சாருபாலாதான் என்று சப்ஜட்ஜ் சபேச சாஸ்திரி கள் திருமண வாழ்த்து வைபவத்திலே கூறியபோது, 'கர கோஷம்' பலமாக எழும்பிற்று. திருமணம் அந்த வட்டா ரத்து மக்களுக்கே கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது!கவர் னரின் வாழ்த்துச் செய்தியைக் கலெக்டர் படித்தார்! வியா பாரிகள் அனைவரும், வரிசை வரிசையாக நின்று, திருமணப் பரிசுகள் வழங்கினார்கள். வெள்ளியால் செய்து தங்கமுலாம் பூசப்பட்ட குடிசை. ஏர் கலப்பை, பரிசளித்துப் பாராட்டுத லைப் பெற்றார், பாரதசேவா சமாஜப் பரிபாலகர் பிராண தார்த்தி. நடனம் - சங்கீதம் - பொய்க்கால் குதிரை ஆட்டம் பள்ளிச் சிறுமிகள் கோலாட்டம் என்று வைபவம் பிரமாத மாக இருந்தது. ஓரோர் சமயம்தானே இப்படிப்பட்ட உல்லாசக் காட்சி யைக் காண முடிகிறது! அதோ கொடி போன்றிருக்கும் அந் தப் புது மணப்பெண்ணின் கூந்தலைக் கோதி நிற்கும் குமா