பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சமூக சேவகி களங்கமில்லாத முகநிலவு கண்டு, ஏதோ பேசுகிறான்- என்னென்னமோ கேட்கிறான் - எதை எதையோ தருகிறேன் என்கிறான். அவள் புன்னகை பூத்த முகத்துடன், 'முடியாது! முடியாது!' என்று கூறுவதுபோலத் தலையை அசைக்கிறாள். அவனோ, அவள் மனம் பாகாய் உருகத்தக்க ஒரு பரிதாபப் பார்வையால் அவளை ஒரு கணத்திலே வெல்கிறான்! நாள்தோறும் களம் - இன்று சாரு, நாளை இரகுராமன், வெற்றி பெறுவது என்று இருக்கிறது, காமக் களியாட்டக் களத்தில். நித்த நித்தம் இந்தக் காதலரின் இன்ப விளை யாட்டைக் கண்டு கண்டு மெலிந்து மெலிந்து நிலவும் தேய்ந் தது ! நிலவு தேய்ந்தால் என்ன! அவன்தான் அவனுக்கென்று ஒரு முழு நிலவு பெற்றுவிட்டானே! அவன் அந்தக் குளிர் மதிப் பார்வையில் தன்னை மறந்திருந்தான். கட்டழகி கிடைத்துவிட்டாளென்பதால் கடமையை அடியோடு மறந்து விட்டானே இவன் என்று கோபத்தால், கண்களை இறுக மூடிக் கொள்வது போன்ற நிலையை நிலவு அடைந்தது. வான விளக்கு அடியோடு அணைத்தது. இவன் இதயச் சுட ரொளியோ கொழுந்துவிட்டெரிந்த வண்ணம் இருந்தது. சாருபாலா இரகுராமன் காதல் வாழ்க்கை அரும்பி, போதாகி, மலர்ந்தது. சாரு! இதென்ன வடு? என்று டாக்டர் இரகுராமன் கேட்டான். "ரொம்ப போக்கிரிதான் நீங்கள்! செய்வதைச் செய்து விட்டு கேலி வேறா செய்கிறீர்கள் என்று கோபித்துக்கொண் டாள் சாரு. கோபம் என்றால் எள்ளும் கொள்ளும் வெடிக் கும் முகம் என்று பொருள் அல்ல; இடம் தெரிகிறதல்லவா, அந்த இடத்துக் கோபம்!! 'கன்னம்! கன்னம்!' என்று அந்த அஞ்சுகம் அஞ்சி அஞ்சி சொல்லச் சொல்ல அந்த அக்ரமக்காரன் கொஞ்சிப் பேசிப் பேசி, 'வடு' உண்டாக்கி விட்டிருந்தான் முன்னிரவு!மறுநாள் மாலை! அவனே, ஏதுமறியாதவன் போல இந்த வடு ஏன் ஏற்பட்டது என்று கேட்டால், கோபம் வராமலா இருக்கும்.