பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 சொர்க்கத்தில் நரகம் "என்ன பிழைப்படி இது, என்ன பிழைப்பு! எழிலும் இளமையும் இருந்தென்ன, ஆடல் பாடல் அறிந்தென்ன? அடிமை வாழ்வுதானே- செச்சே! என்னென்ன இழிசெய லுக்கு உடன்பட வேண்டியிருக்கிறது. உடன்படுவதா? துரத் தப்படுகிறோம்! இந்தக் கேவலமான நிலைமையைப் பெறவா தவமாய்த் தவமிருந்து தேவமாதரானோம். எனக்கு வரவர ரம்பா! இந்த விண்ணுலக வாழ்வு வேம்பாகி வருகிறதடி என்று திலோத்தமை கூறினாள் -கண்களில் நீர் துளிர்த்தது. 'வேம்பு என்கிறாயடி திலோத்தமா, எனக்கு இந்த வாழ்வு எட்டியாகி விட்டது. பட்டியில் மாடுகளைப் பார்த் திருக்கிறோம், அவைகளுக்கு உடலிலேதான் புண்; பசும் பொன்மேனி நமக்கு. ஆனால் உள்ளத்திலேயோ ஓராயிரம் புண் . அப்பப்பா! எவ்வளவு இழிநிலைக்கு ஓரோர் சமயம் ஆளாக நேரிடுகிறது. எப்படிப்பட்ட காமாந்தகாரத்துக்கு உடந்தையாக நேரிடுகிறது. திலோ! நம்மைத் தீயிலே தள்ளி விட்டாலும் பரவாயில்லை;கருகித்தான் போவோம். ஆனால் பிறரைத் தீயில் தள்ளும் வேலையை அல்லவா நமக்குத் தரு கிறார்கள்!” என்று ரம்பை கூறிக் கொண்டிருக்கும்போது, தொலைவில் மேனகை வந்துகொண்டிருக்கக் கண்டு, "பார்த் தாயா! மேனகா வருகிறாள்; எவ்வளவு ஆயாசத்தோடு வரு கிறாள், பார்! பாபம், என்ன காரியமாகப் போய்வருகி றாளோ? எத்தகைய இன்னலுக்கு ஆளானாளோ? என்று பச்சாதாபத்துடன் கூறினாள். மேனகாவும் அவர்கள் அமர்ந் திருந்த பளிங்காலான படிக்கட்டில்வந்து உட்கார்ந்து, முகத் திலே முத்து முத்தாகத் துளிர்த்துக் கொண்டிருந்த வியர் வையைத் துடைத்துக் கொண்டாள். 6