பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரகம் பொங்கும் இடைக்கலங்களாகட்டும். 123 களத்திலே காதல் நின்று நீ உன் கண்ணம்பை ஏவினால் தவக்கோலம் கலைந்து போகும். உனக்கென்ன இது தெரியாதா!! இன்று நேற்றா நீ இந்தக்காரியத்தில் ஈடுபடுகிறாய். கல்லுருவம்கூ! உருகிடத் தக்க வகையில் சாகசம் புரியும் சல்லாபி அல்லவா நீ. உன்னி டம் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது. சென்று வா, வென்றுவா ! என்றுதானே நமக்கு இங்கு கட்டளை பிறக் கிறது. இதுதான் நமது வாழ்வு என்று தெரிந்திருந்தால், ரம்பா! ஆண்டவன் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன்; நான் இங்குவரச் சம்மதித்து இருக்கவே மாட்டேன். என் றாள் திலோத்தமா. 4. 'நமது வேதனை யாருக்குத் தெரியப் போகிறது.கிடக் கட்டும், நாம் செய்த தீவினை இது. என்ன செய்யலாம். இப்போது என்ன காரியமாகச் சென்று வந்தாய்? அதைச் சொல்லு!" என்று ரம்பை கேட்டாள். திலோத்தமா, மேன கையை அருகே அழைத்து அணைத்துக் கொண்டு, ரம்பை யிடம் "போடி போக்கிரிச் சிறுக்கி! பார்த்தாலே தெரியவில் லையா, அவள் பட்டபாடு! கிளறிக் கிளறிக் கேட்கிறாயே! கிளியே! நீ வருத்தப்படாதே" என்று கூறினாள். E திலோத்தமா/ மலரினைப் பறிப்பதற்கும் கசக்கி எறி வதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கூடவா இந்தப் பெரிய ஞானி அறியாதிருப்பான் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அவன் நாலு வேதத்தையும் ஆறு சாஸ்திரத்தையும் படித்துப் படித்துத் தடித்துப் போன உள்ளத்தினனாகிக் கிடந்தான். தங்கமே! தங்கமே! என்றுதான் கொஞ்சினான். ஆனால், இரும்பாலான சிலை என்று எண்ணிக் கொண்டல் லவா தழுவினான். இதழ், மலராம், எனக்கு! மலரை எப்ப டிப் பக்குவமாக, இலாவகமாகப் பறித்து நுகர வேண்டும் என்றாவது அறிந்திருந்தானா! அப்பப்பா! அவனிடம் சிக்கிச் சீரழிந்தேன். தாயுமானேன், தெரியுமா? என்றாள். "அடி, அழகுராணி! தாய் ஆகிவிட்டாயா? கேளடி. ரம்பா! மேனகா, தாயாகி விட்டாளாம். குழந்தை எங்கே யடி கோமளமே! என்ன குழந்தை? ஆணா, பெண்ணா? அழ