பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரகம் 125 களிப்பூட்டிக் கற்பனையைச் சுரக்க வைக்கும் கலைவடிவே! என் தவத்தின் பலனே! ஓம குண்டத்தருகே கிளம்பிய, வேத ஒலியை உன் வடிவெடுத்து வந்ததோ, என்னை வாழ்விக்க! நிரந்தர இன்பத்தை நாடினேன், நிர்மலனைத் தேடினேன் அதைப் பெற! அது இருக்குமிடம் விண்ணுலகம் என்றெண்ணி அண்ணாந்து பார்த்துப் பார்த்து அலுத்துப் போனேன். சர்வலோக இரட்சகன், என் தவத்துக்கு மெச்சி, 'வரம்' உன் வடிவில் அருளி இருக்கிறார்! அழகொழுகும் குழந்தாய்! அடவியல் நான் பெற்ற அருஞ்செல்வமே!" என்றெல்லாம் விசுவாமித்திரர் குழந்தையிடம் கொஞ்சியிருப்பார்" என்றாள் ரம்பை. குறும்பாக அல்ல-- குதூகலத்துடன்தான். மேனகை யின் கன்னத்திலே கண்ணீர் புரண்டது. “காட்டு வாசத்தால் கல்மனமாகிவிட்ட அந்தக் காதகன், 'காமுகனாகிவிட்டேனே; கடுந்தவம் கலைந்ததே! கடவுள் சன்னிதானத்துக்கு இந்தக் கறைபடிந்த நிலையில் எங்ஙனம் செல்ல முடியும்' என்று கூறி விட்டு, என் செல்வத்தை, அவனுடைய காதல் விளையாட் டில் கனிந்த இன்பத்திருவைத் தொடவும் மறுத்தானடி! அதே காட்டிவே புலி, குட்டிகளுடன் விளையாடுகிறது. பாம்புப் பிலத்திலே பாசம் இருக்கிறது? பரமபதம் தேடிடும் அந்தப் பாபிக்கு, பெற்றெடுத்த குழந்தையிடம் அன்பு சுரக்கவில்லை. என் அழகைக் கண்டதும், தவம் கலைந்தது இன்பம பெற்றானதும மீண்டும் தவத்தின்மீது நினைவுசென் றது! என்ன விந்தையான மனமடி இது. கள்ளன், வழிமறித்து அடித்துப் பொருளைப் பறித்துக் கொண்டான பிறகு கடுகிச் செல்கிறானே, அதுபோலவே என்னிடம் பெறவேண்டிய தைப் பெற்றுக் கொண்டான். பிறகு, கற்ற வேதத்தைக் கவனத்துக்குக் கொண்டு வந்தான்; கண்களை இறுக மூடிக் கொண்டான். தேவமாதல்லவோ தான்! இங்கு குழந்தை களைக் கொண்டு வருதல் முறையல்ல என்பதை அறியீரா? என்று கேட்டேன்- பூலோகத்தில் இவள் ஓர் புவனசுந்தரி யாவாள்.பூஜிதரே!கையிலேந்திப் பாரும்! கண்ணழகு பாரும்! கருநீலமலர் பாரும்! கட்டித் தங்கம். குழந்தை வடிவெடுத்தி ருக்கிறது! என்று பாசத்தை ஊட்ட முயற்சித்தேன். பாறை மனம் கொண்டோனானான். உணர்ச்சிக்கே ஆட்படாதவனா