பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சொர்க்கத்தில் இடத்தை மட்டமானதென்று கூறிக்கொண்டு, அங்கு உள்ள வர்களிலே மக மட்டரகமானவர்களும் செய்யக் கூசும் காரி யங்களை இங்கு செய்துகொண்டு, நாம் இருக்கிறோம். இதென்ன விந்தை!! நாம் பூலோகத்தை மட்டமானது என்று கூறுவது ட்டுமல்ல, பூலோகத்தில் தேவலோகம் மேலானது என்று போதிக்கப்பட்டு வருகிறது! அதுதான் எனக்கு வேடிக்கை கலந்த வேதனையாகப் படுகிறது," என்றாள் மேனகை. "பூலோகத்திலே மகா உத்தமிகளாக, பதிசொற் கட வாப் பாவையராக, கணவன் பொருட்டு எத்தகைய கஷ்ட நஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடிய காரிகையாக இருப் பினும், மேனகா! இங்கே, தேவலோகத்திலே ஒரு பத்துநாள் தங்கிவிட்டால் போதும்; ஒன்று எங்களைத் தலைகீழாகப் பிடித்துத் தள்ளிவிடுங்கள் பூலோகத்துக்கு. அக்ரமமும் ஆபாச மும் நெளியும் இந்த அமரலோக வாழ்வு எமக்கு வேண்டாம் என்றாவது காலடி வீழ்ந்து கண்ணீர் பொழிந்து கேட்பார் கள். அல்லது மெள்ள மெள்ள காமாந்தகாரப் படுகுழியில் தங்களையும் அறியாமல் தள்ளப்பட்டுப் போவார்கள். பாவம்! இங்கே இருக்கிற இழிதன்மை இன்னதென்று தெரி யாமல், அங்கே அவர்கள், பூஜை நடத்தியும் பூசுரன் காலில் வீழ்ந்து வணங்கியும், கடுமையான நோன்பு விரதம் ஆகியவை களில் ஈடுபட்டும் தேவலோகம் வந்து சேரவேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள்." .. 'ஆமாம், தேவலோகமென்றால், தேவதேவனுடைய திவ்ய நாமங்களைப் பஜித்துக் கொண்டு, காலையில் கைலா யம், மாலையில் வைகுந்தம் சென்று தொழுது பேரானந்தம் அடையும் இடம், நிர்மலனுடன் நித்தநித்தம் உரையாடி மகிழும் லோகம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர் களுக்குத் தெரிகிறதா, இங்கு நடைபெறும் காமக் களியாட்ட வெறிச் செயல்கள்." "அந்த உண்மை தெரிந்துவிடக் கூடாதென்பதற்காகத் தானே இங்குள்ள தந்திரக்காரர்கள் பூலோகத்தில் புரா