பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சொர்க்கத்தில் 'இந்தக் குறும்புக்காரர் ஏன் பெண் வடிவமெடுக்க வேண்டும்? புதுப்பெண் என்று தெரிந்ததும் அவர் புண்ய கைங்கரியத்தில் ஈடுபட்டுவிட்டார்." 'அறுபது புத்திரர்களாம், அந்த ஆபாசக் கூட்டுறவில் பிறந்தவை... " பூலோகவாசிகளிடம் புராணக்காரன் இந்த அறுபது குழந்தைகளின் பெயரை அறுபது வருஷங்களாகக் கொண் டாடுவது புண்ய காரியம் என்று கூறிவிட்டான்; மக்களும் நம்பிவிட்டார்கள்.” 'பாரேண்டி அக்ரமத்தை! கள்ளனுடைய கன்னக் கோலுக்கு கோயில்கட்டிக் கும்பிடச் சொல்லி திருட்டுக் கொடுத்தவர்களிடம் கூறுவது போலச் செய்திருக்கிறார்கள்" ‘என்னதான் செய்ய மாட்டார்கள இந்தத் தேவர்கள்! பூலோகத்தில் சிவலிங்க பூசையே சிலாக்கியமானது என்று நம்ப வைத்திருக்கிறார்களே! " 'ஆமாம். இங்கே நடைபெறுகிற ஆபாசம் அத்தனை யும் அங்கு தேவப் பிரசாதமாக்கப்படுகிறது.' "மோகினியாக வடிவமெடுத்தாரே, மஹாவிஷ்ணு, எதற்காகத் தெரியுமாடி...?* "இவரும் அரனும் கூடினர்; ஐயனார் பிறந்தார்... பூலோகத்தில் மிகப்பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள் ஐயனாரை... "அதற்கல்ல நான் கேட்பது. ஏன் மோகினியாக வடிவ மெடுத்தார் தெரியுமா மகாவிஷ்ணு? அடி, தேவமாதர்களே! நாங்கள் இடுகிற கட்டளைப்படி நடக்காவிட்டால், எங் களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; வேறு எத்தனையோ வழி கள் எங்களுக்குத் தெரியும். உங்கள் தயவே தேவையில்லை. எங்களால் மோகினியாகி ஒருவருக்கொருவர் சேவை செய்து கொள்ள முடியும் என்று கூறி, நம்மை மிரட்டுவதற்காகவே, மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார்." இருக்கும், இருக்கும். அந்த முனிவனுடைய தவத்