பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கருப்பண்ணசாமி கருப்பண்ணர், "போதும் தேவி, உன் தொல்லை. வரம் தந்து அவர்களின் குறையைப் போக்கவில்லை என்பதற்காக என்மீது சீறுவார்கள் என்ற பயம் எனக்கு இல்லை-- நானென்ன தேவாலய அரசு செலுத்தி அனுபவமில்லாத வனா...இங்கு இல்லாவிட்டால், மேலுலகில் என்னைப் பூஜித்த பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் எண்ணிக் கொள்வார்கள். இங்கே அவர்களுக்குள்ள குறையைத் தீர்த்து வைக்காததற்காக என் மீது சீற மாட்டார்கள் என்ற சித்தாந்தம் எனக்கும் தெரியும். நான் ராயப்பட்டது அதனால் அல்ல" என்று பெருமூச்சு வருமளவு வேகமாகப் பேசினார் கருப்பண்ணசாமி. தேவியார் வேகமாகச் சென்று வாயிலில் பார்த்துவிட்டு வந்து, "கருப்பண்ணா! பக்தர் யாருமல்ல, காற்று பலமாக அடித்ததால் மணி ஓசை கேட்டது. பயப்படாதே. சரி, பக்தர்கள் வருகிறார்கள் என்றால் ஏன் பயம் உண்டாகிறது உனக்கு? அதைச் சொல்லு" என்று கேட்டார்கள். பக்தர் யாரும் வரவில்லை என்று தெரிந்ததால் தைரியம் பெற்று, தன் பீடத்தில் அமர்ந்து, எதிரே ஒரு பீடத்தில் அமர்ந்த தேவியிடம் கருப்பண்ணசாமி விளக்கம் கூறலானார். "தேவி! பக்தர்களால் எனக்கு ஏற்பட்ட ஆபத்தும் சங்கடமும் உனக்கு என்ன தெரியும்? வரவர இந்த 'வேலை' யிலேயே எனக்கு வெறுப்பு வளர்ந்து கொண்டு வருகிறது. தான் செய்த மோசத்தை அரை பலம் கற்பூரப் புகையிலே மறைத்துவிடலாம் என்று எண்ணுகிறான். அதற்கு நான் உடந்தையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இவனுடைய பேராசைக்கு நான் துணை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறான். காரணம் கேட்டால் பெரிய படைய லிட்டிருக்கிறேன்' என்று கூறுகிறான். தேவி குறுக்கிட்டு, "இதென்ன, புது விஷயமா கருப் பண்ணரே! இப்படிப்பட்ட பக்தர்களை நாம் நெடுங்காலமா கப் பார்த்து, பழகிக் கொண்டுதானே வந்திருக்கிறோம் என்று கூறிட, கருப்பண்ணசாமி, மனக் கொதிப்புடன், "இப்போது பக்தர்கள் அந்த அளவோடு நின்றுவிடவில்லை