பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோசிக்கிறார் 143 மானப் படுத்துவது முறையா--என்று கேட்க விருப்பம் தான்- எப்படிக் கேட்க முடியும்? ஊரிலே இதற்குள்ளே பேசப்பட்ட பேச்சோ, கேட்டுச் சகிக்க முடியல்லே.” "சாமி புறப்படலே இன்னும்? "இல்லே - சாமியை விடமாட்டேன்னு சொல்றாங்க ளாம்." "ஏனாம்-யாராம் -?" "அவுங்கதான் பிச்சையா." ‘“ஏனாம்.” "என்னமோ விவகாரம் இருக்காம், கருப்பையா வோடே அந்த விவகாரத்தைப் பைசல் செய்து ஆசாமியைத் தொடு--இல்லேன்னா விடமாட்டோம்னு பேசறாங்க." 'சாமி, மண்டபத்திலேதான் இருக்கா?" ஆமாம் - பாவம் -மண்டபத்திலேயேதான் இருக்கு.'* 'இந்நேரம் கோயில் போய்ச் சேர்ந்திருக்குமே. "ஆமாம், விட்டாத்தானே!>* "இவர்களுக்குள்ளே சண்டைன்னா, சாமி என்ன பண் ணிச்சாம், பாவம்! அதை மண்டபத்திலே காக்கப் போட்டு வைக்க வேணுமா? இப்படித் தாய்மார்கள் பேசுகிறார்கள். சிறுவர்களோ, டோய்! சாமி அம்பிட்டுக்கிச்சி, மண்ட பத்திலே" என்று கூவித் தொலைக்கிறார்கள். தேவி! கோயில் நிர்வாக சம்பந்தமாக, அந்த இரண்டு பிரிவுக்குள் ஏதோ தகராறாம்--அதற்காக என்னை இந்தக் கோலப்படுத்தினார்கள்.