பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கருப்பண்ணசாமி 'கோயில் தகராறு தீர்க்கப்பட்டாலொழிய, என்னை மண்டபத்தைவிட்டு எடுத்துச் செல்லக்கூடாது என்று கண்டிப் பாகக் கூறிவிட்டதுடன், கணக்கு வழக்கு முடிந்தாலொழிய கருப்பண்ணசாமியைக் கோயிலுக்குக் கொண்டு போகவிடப் போவதில்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, தேவி, என்னை மண்டபத்துக்குள்ளே விட்டுவிட்டு, கதவை இழுத் துப் பூட்டிக் கொண்டு போய்விட்டார்கள், பிச்ச பக்தக் கூட்டம். நான் உள்ளே அடைபட்டுக் கிடந்தேன்- மண்ட பத்தைப் பூட்டிவிட்டார்கள். உற்சவத்துக்கு ஆசைப்படா மலிருந்தால், நிம்மதியாகக் கோயிலிவே இருந்திருக்கலாம்- இப்போது, மண்டபத்திலே போட்டு பூட்டிவிட்டார்கள். "டோய்! சாமி, உள்ளே இருக்குடா-பூட்டிப் பூட் டாங்க" என்று கூவிக் குதிக்கிறார்கள். பாவம்! கருப்பண்ணசாமியைப் போட்டு பூட்டிவிட் டான்க! என்று தாய்மார்கள் முகவாய்க் கட்டையில் கை வைத்தபடி பேசுகிறார்கள். நான் உள்ளே சிறை வைக்கப் பட்டேன். என்னை இந்தச் சதிக்கு ஆளாக்கிய கருப்ப பக் தர், என்னைச் சிறை மீட்க அரும்பாடுபடலானார், 'இந்து மத பரிபாலன போர்டாராமே, அவர்களிடம் முறையிட்டா ராம்! "சாமியை மண்டமத்திலே போட்டு பூட்டிவிட்டார்கள்! கோயிலிலே சாமி இல்லை-சாமியை வெளியே கொண்டு போர்டார் வந்து கெடுக்கவேணும்"னு கேட்டாராம். இதுக்கா இருக்காங்க! ஏதோ கணக்குவழக்கு சரியா இருக்கா இல்லையான்னு பார்க்கத்தானே அந்தக் காரியத்தை ஒழுங் காகச் செய்யவே அவர்களுக்கு நேரம் போதறதில்லே - என் னைப் போட்டு பூட்டிவிட்டா, அதற்காக ஓடோடியா வரு வாங்க! போப்பா! போயி, போலீசிலே சொல்லுன்னு யோசனை கூறிவிட்டாங்க. ஓடியிருக்கிறார் போலீசுக்கு. நான் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறேன். போலீசிலே என் னென்ன பேசினாங்களோ தெரியல்லே! என்ன பேசியிருக்கப் போறாங்க, கேலிதான்! கடைசியிவே லால்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ் படையோடு வந்து, பூட்டை