பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூதாடி 151 அடித்தானதும், உள்ளே இருந்து ஐயரின் மற்றொரு நண் பர், அவசர அவசரமாக, கோட்டிலே ஒரு கையுடன் ஓடி வந்து காரில் ஏறினார். கார் புறப்பட்டது, உள்ளே பேச்சு ஆரம்பித்தது. முத்துசாமி ஐயர்'சீனு! தெரியுமோ விஷயம்.' சீனு: என்ன முடிச்சுட்டேளா? மு: முடியாமே என்னடா! எல்லாம் எடுத்துப் பேசற திலேதானே இருக்கு. சீ: முதலி, ரொம்ப ஜாக்ரதையான பேர்வழியாச்சே. கொஞ்சத்திலே அகப்பட்டுக் கொள்ள மாட்டானே. மு: அவன் 'சீட்டு' என்னான்னு எனக்குத் தெரியாதா? அதை வெட்டுவதற்கு என்னிடம் துருப்பு இல்லையா? சீ: ஆமாம் -- நடந்ததைச் சொல்லும் - நிஜமாவா சிக் கிண்டான்? மு: டாட்டா ஷேர் வேணுமான்னு ஆரம்பிச்சேங்கா ணும் முதல்லே.. சீ: சாமர்த்தியமாகத்தான் ஆரம்பிச்சிருக்கீர்- முத லிலே உமக்கு ஷேர் வேணும்னு பேச்சு ஆரம்பிச்சிருந்தா படிந்திராது. மு: முட்டாள்தானே ஓய், தன் கைத் துருப்பைப் பாழாக்கிண்டு, பேந்தப்பேந்த விழிப்பான். நானாகப்போய், உம்ம 'லட்சுமிராஜ்' ஷேர் விலைக்குத் தருகிறீரான்னு கேட் கணுமா- சீ: உமக்காசொல்லணும்! சரி, டாட்டா வேணுமான்னு ஆரம்பிச்சீர்- பிறகு... மு: டாட்டாதான்யா உனக்குத் தெரியும்- ஏன்னா, அதுதானே பிரக்யாதியா இருக்கு மற்ற ஷேரெல்லாம் மண்ணுன்னு நினைக்கிறீராக்கும்னு அவன் ஆரம்பிச்சான். சீ: ஓஹோ! அவன் அப்படி ஆரம்பிச்சானா? அதாவது, லட்சுமிராஜ் ஷேரின் பெருமையைச் சொல்ல அஸ்திவாரம் போட்டான்.