பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 துணை நடிகை அந்தச் சிற்றூரில் ஒரு அம்மையாருக்குப் பொன்னாடை போர்த்தப் போவது பற்றிய செய்தி மாவட்டச் செய்தித் தாளில் வந்திருந்தது. இவ்விழ வுக்குச் சோபியாவில் இருந் தும் விருந்தினர்கள் வரப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந் தது. குறித்த நாளில் நூல் நிலையக் கிளப்பில் விழா ஆரம் பிக்சப்பட்டது. மண்டபம் முழுவதும் மக்கள் நிறைந்து இருந் தனர். சோபியாவிலிருந்து வந்தவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர். 'இதென்ன, சம்பிரதாயமான பாராட்டு விழாதானே!" என்று பலரும் பாராட்டும்படி அசமந்தமாக இருந்தனர். கூட்டத்தினர் முகத்தில், அலுப்பின் அறுகுறிகள் அப்பட்ட மாகத் தெரிந்தன. அங்கு இருந்த பள்ளிச் சிறுமிகளின் முகத் தில் மட்டுமே உற்சாகம் மிளிர்ந்தது. . கூட்டத்தினரின் மனோ நிலையை ஊகித்துக் கொண்டு விழாக் கமிட்டித் தலைவர், சுருக்கமாக விழாவை முடித்துக் கொள்ள நினைத்தார். ஆனால் அவர் முன்னிருந்த நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த பேச்சாளர்களின் பட்டியல் மிக வும் நீளமாக இருந்தது. பலரது பெயர்களை நீக்கிவிட நினைத்தார். ஆனால் ஒவ்வொருவரும் ஒரு ஸ்தாபனத்தின் பிரதிநிதியாக இருந்ததால், அவ்வாறு செய்ய முடியவில்லை! கடைசியில் ஒருவரது பெயருக்கு நேராக "தனிப்பட்ட முறை யில் பேசுவார்" என்றிருந்தது. ஆம்; இந்த ஆசாமியின் பெயரையாவது நீக்கிவிட வாம் என்று நினைத்த தலைவர் பென்சிலைக் கையில் எடுத்தார். ஆனால் ஏதோ ஓர் உணர்வு அவரது கைகளைக் கட்டிப் போட்டது.