பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகை 159 அப் பெண்மணி அப்போது மார்பில் அடித்துக்கொண்டு புலம்பத் தொடங்கிவிட்டாள். 'ஐயோ! என் அன்பே! உண்மையாகவே நீ இறந்து விட்டாயா! கேளுங்களைய்யா, என் சோகக் கதையை, அவர் ஒரு மாணவர், பிரெஞ்சுக்காரர்....காஸ்டன் என அவரை அழைப்பார்கள்.... இளம் தாடி வளர்த்து வந்தார். அவர் ...எப்பொழுதும் நீண்ட தோல் காலணி அணிவார்...ஏன், என்னுடைய உயிர் இன்னும் போகவில்லையோ!! அவர் என்னை உயிரினும் பெரிதாக நேசித்தார்...என் அன்பு ராஜா! ஐயோ! மறைந்தனையோ!!" 'இந்தா பாரம்மா! என்ன உளறல் இது! நீ யாராவது ஆளைப் பார்த்தாயா?" "என்னய்யா, காட்டுக்கூச்சல் போடுறே! என் காதலன் மட்டும் இப்பொழுதிருந்தால்..அன்பே! என் கண்ணாளா! ஐயோ என்னை இப்படியா விட்டுச் செல்ல வேண்டும்." > இவ்வாறு கூறிக் கொண்டே அப் பெண்மணி அந்தப் போலீசுக்காரர்கள் இருவரையும் கட்டிக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள். "பைத்தியம்! நல்ல பைத்தியம்! என்று கூறிக்கொண்டே போலீஸ்காரர்கள் அவ்விடம் விட்டு அகன்றனர். பிறகு அவள் வீட்டுக்குள் வந்தாள். இளம் மங்கை தன்னந்தனியாக இருக்கும் வீட்டில் இருப்பது தகாது என்று எண்ணி வெளியேற நினைத்தேன் நான். எனவே தோட்டத் துக் கதவைத் திறந்தேன். அப்போது, "சற்றுப் பொறுங்கள்' என்று அன்பு ததும்பும் குரலில் அவள் என்னைப் பார்த்துக் கூறினாள். அவள் என்னைப் பார்த்த பார்வையில் எவ்வளவோ வாஞ்சையும் அன்பும் நிறைந்து இருந்தன. போலீஸ்கார ரிடம் பைத்தியம்போல் நடந்து கொண்ட அதே பெண்தானா இவள் என்று ஐயமுற்றேன் நான். ஆம்; அவளேதான்; அதே எழில் முகம்—வெண்ணிற சால்வை.