பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 துணை நடிகை ஏன் அங்கேயே நிற்கிறீர்கள்?வாருங்கள் வீட்டிற்குள் என்று அழைத்தாள். மறுக்க மனமின்றி அவளைப் பின்தொடர்ந்தேன். அந்த அறையில் பல நாடகக் காட்சிகளின் புகைப்படங் கள் தொங்கவிடப்பட்டு இருந்தன. "தாங்கள் ஒரு நடிகையா?" என்று கேட்டேன், 'நடிகை என்று சொல்லிக் கொள்ள முடியாது. துணை நடிகை என்று வேண்டுமானால் கூறலாம்" என்றாள் அப் பெண். உண்மையிலேயே, நீங்கள் ஒரு பைத்தியம் என்றே நான் நினைத்தேன், நீங்கள் போட்ட கூச்சலைக் கேட்டு! உண்மையிலேயே நீங்கள் உங்கள் பாகத்தை நன்கு நடித்தீர் கள்!" "இல்லை;அப்படி ஒன்றுமில்வை. எனக்கு எப்பொழு துமே எனது நடிப்புத் திறமைபற்றி திருப்தி ஏற்பட்டதில்லை. நான் ஒரு குட்டி நடிகை. சிறிய பாகங்களையே ஏற்றுநடித்து வருபவள். இன்று நான் அவர்கள் முன் நடித்ததுபோல் மோச மாக நடித்து இருந்தால், நாடகக் கொட்டகை காலியாகி விட்டு இருக்கும்" என்றாள் " கர்னல் சிறிது நேரம் பேசுவதை நிறுத்தினார். பிறகு கூறினார்: "அப்போது நான் அப் பெண்மணியின் கரத்தை முத்தமிட மறுத்துவிட்டேன். எனவே, இன்றாவது அதை நான் செய்ய விரும்புகிறேன...' மண்டபத்தில் கரகோஷம் வானைப் பிளந்தது. எந்த அம்மையாருக்குப் பொன்னாடை போர்த்துவதற்காக விழா நடத்தப்பட்டதோ அந்த அம்மையாரின் கரங்களை பேச்சாளர் முத்தமிட்டார். அவள் எப்பொழுதுமே சிறிய பாகங்களை வகித்து வந்தவள், எப்பொழுதுமே ஒரு துணை நடிகையாக ஒதுங்கி நின்றவள் என்பதை தலைவருக்குப் பின் னால் அவளது உருவம் மறைந்திருந்தது!..