பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வழக்கு வாபஸ் இடம்: ஒரு (நீதிபதியின் ) கோர்ட் மண்டபம். இருப்: நீதிபதி, வாதி வக்கீல்; சிவநேசன்- குற்றவாளி; மாணிக்கம் செட்டியார்-வழக்கு தொடுத்தவர்; முத்துச்சாமி - ஒரு பூசாரி, சாட்சி; இருளாண்டி-- மற்றோர் பூசாரி, சாட்சி; சேவகன், மேலும் பல வக்கீல்கள், ஊர் மக்கள் ஆகியோர். நிலைமை கோர்ட்டிலே, சிவநேசன் குற்றவாளி என்பதை நிரூபிக்க,வாதி மாணிக்கம் செட்டி யாரின் வக்கீல், பல கூறிவிட்டுக் கடைசியாகச் சுருக்கமுரைக்கிறார். வாதி வக்கீல்: இவன், மாணிக்கவாசகம் செட்டியார் மண்டிக்கடையில் குமாஸ்தா. இவனிடம் செட்டியாருக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைக்குப் பாத் திரனான இவன், செட்டியார் கடையிலிருந்து பத்து வீசைக் கற்பூரத்தைக் களவாடிக் கொண்டு போய்விட்டான். இதுவே இவன் செய்த குற்றம். (கூண்டில் குற்றவாளி நிற்கிறான்.) மாஜிஸ் (குற்றவாளியைப் பார்த்து) உன் பெயர் என்ன? குற்: சிவநேசன். மா: குற்றம் செய்திருப்பதை ஒப்புக் கொள்கிறாயா? குற்: நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே. பூ-157-செ-2