பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பேய் ஓடிப் போச்சு அண்ணே! பூசாரி பொன்னனை நான் என்னமோன்னு எண்ணிகிட்டுக் கிடந்தேன். இப்பத் தெரியுது அவன் இலே கப் பட்டவனில்லைங்கற விஷயம் என்னத்தெடாப்பா, கண்டுட்டே இப்ப?"

“என் மவளுக்கு, கொஞ்ச நாளா, மயக்கமா இருந்தது பார் அண்ணே! மாமரத்துப் பிசாசு, பிடிச்சுகிட்டு ஆட்டி வைச்சிதேண்ணே..." 'ஆமா! உம்மவ, சொல்லாயியைத்தானே..."

"ஆமாண்ணே! பூசாரி போட்ட மந்திரத்திலே, பேய் ஓடிப் போச்சண்ணே! இப்ப என் மவ, சௌக்யமா, சிரிச்சிப் பேசிகிட்டுச் சிங்காரிச்சி பூ முடிச்சிகிட்டு இருக்கிறா. என்ன மோண்ணே! மாயம் மந்தரம் இதெல்லாம் தப்புன்னு, என் மவன்,பட்டணத்து ஆசாமிக பேச்சைக்கேட்டுகிட்டு, சொல்லி வந்தான். நானும், அவன் நம்மப்போல பட்டிக்காட்டிலே இல்லையே, டிராம் வண்டி ஓடற பட்டணத்திலே இருக் கானே!ரொம்பப் படிச்சவங்க பேச்சைக்கேட்டு இதைச்சொல் றான்னு, நம்பிக்கிட்டு இருந்தேன். பைத்யக்காரப் புள்ளே! இப்பல்லவா தெரியுது, மந்தரம்னா பொய்னு சொல்றதுக் கில்லைங்கிற சூச்சமம். நல்லாயிடுத்து செல்லா. முந்தி சுருண்டு சுருண்டு படுத்துக்குமா? பேசாது சரியா முகத்தைக் கழுவாது--ஒருவேலையும் செய்யாது- சிடு சிடுன்னு பேசிகிட்டு "பேய் பிடிச்சா அப்பிடித்தான்.' "