பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓடிப் போச்சு 51 விஷயங்களைப் பற்றி- அவசர அவசரமாக அவன் படித்துத் தெரிந்து கொண்ட அளவு கூறுவான். வாயைப் பிளந்து கொண்டு கேட்பார்கள் கிராமவாசிகள். செங்கோடனுக் குப் பெருமை! தன் மகனிடம் "சேதி" கேட்க, கிராமமே திரண்டு வருவது கண்டு. 'சூரியன் இருக்கே, சூரியன்" என்று ஆரம்பிப்பான் சுப்பு. 'சொல்லுப்பா! சூரிய பகவான்தான் கண் கண்டதெய் வம். அவருக்கு என்ன? சொல்லு" என்று பக்தியைச் செலுத் தியபடி கேட்பான் குட்டி. " "சூரியன், பகவானுமில்லே, மனுஷனுமில்லே! அது பெரிய நெருப்பு உருண்டைப்பா" என்பான் சுப்பு. குட்டி பக்கத்திலே இருக்கிறவனைப் பார்த்துக் கண் சிமிட்டுவான். "அப்படின்னா, அந்த உருண்டை உருளுதோ கானை யிலேருந்து சாயரட்செ வரையிலே?" என்று கேலி பேசு வான் குப்பன். இதை எல்லாம் சமாளித்துக் கொண்டு. அவர்களுக்குப் பல விஷயங்களை விளக்குவான் சுப்பு. "என்னென்னமோ சொல்றாண்டா நம்ப் சுப்பு!" என்று புகழ்வார்கள். அவன் சொல்வது, சிலருக்கு விஷயம் புரியாவிட்டாலும் 'அது சரியாகத்தான் இருக்கும்; எல்லாம் சுப்புவுக்குத் தெரியும்' என்று கூறிவிடுவார்கள். பத்துக் காணி பூமிக்குச் சொந்தக்காரனானால்கூட, சுப்பு அடைய முடி யாத மதிப்பு, "ஆபீஸ் வேலை" கொடுத்தது. அவன் வேலை செய்து வந்த பத்திரிகை 'உலகம்* என்பது.விதவிதமான வண்ணப் படங்கள் நிரம்பியது. சிரமப் பட்டு, அந்தப் படங்களை எல்லாம் கத்தரித்து, ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்திலே ஒட்டி, செல்லாயிக்குத் தந்தான். தன் அண்ணன் கொடுத்த அந்தப் புத்தகத்தை அருமையான பொக்கிஷமாக மதித்தாள் செல்லாயி. உண்மையிலேயே. எப்போது சமயம் கிடைத்தாலும், அவளுக்கு அந்தப் படங் களைப் பார்ப்பதும், தன்னை ஒத்த பெண்களுக்குக் காட்டு வதும்தான் வேலை.