பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சோணாசலம் சோணாசலம், சொன்ன சொல் தவறாதவன் என்ற நற்பெயர் எடுத்தவன். பலருக்கு உபகாரம் செய்தவன். தன்னால் முடிந்த உதவியைச் செய்ய அவன் எப்போதுமே தவறுவதில்லை. பலர் அவனைப் பாராட்டியுமிருக்கிறார் கள். ஓரிரு காரியவாதிகள் மட்டும், சோணாசலத்தின், "பைத்தியக்கார” சுபாவத்தைப் பற்றிக் கேலியாகப் பேசுவ துண்டு. "இந்தச் சோணாசலம் இருக்கிறானே, தன்னால் எவ்வளவு தாங்க முடியும் என்ற கணக்கே தெரியாதவன். எதற்கும் முன்னாலே நிற்கிறான். பணம் நிறைய வைத் துக் கொண்டிருப்பவர்கள், பத்து ரூபாய் தருவதற்கு யோசிக் கிறார்கள்; இவன் தாராளமாகக் கொடுத்துவிடுகிறான். 'பசி' என்று எவனாவது கூறிவிட்டால் போதும்; மடியிலே எட்டணா இருந்தாலும், ஒரு ரூபாய் இருந்தாலும் சரி, எடுத்துக் கொடுத்து விடுகிறான். பைத்யக்காரன்! இப்படிக் கைக்காசைச் செலவழித்துவிட்டு, இவன் 'ஓட்டாண்டி'யாகி விட்டா, பிறகு, இவனுக்கு உதவி செய்ய யார் வருவார்கள்? கஷ்டப்படும்போது தெரியும் இதெல்லாம்-- என்று பேசி னார்கள்.

. சோணாசலம் “ஓட்டாண்டி’”யாகிவிட்டான்- ஒரு குற்றமும் அவன் செய்யவில்லை. அவன் செய்து வந்தது, 'லுங்கி' வியாபாரம். கைலித்துணியை, வெளி நாடுகளுக்கு அனுப்பி வந்தான். காசும் கொஞ்சம் சேர்ந்தது. என்ன குறைந்தாலும், உருப்படிக்கு மூணு ரூபாய் இலாபம் வந்தது - எனவே, உற்சவம் என்றால் 50,பஜனைக்குப் பத்து,