பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ராஜபார்ட் ரங்கதுரை அச்சாபீஸ் மானேஜரைப் போய்க் கேளுடா, இப்ப டித்தான் போஸ்ட்டர் போடுவதா என்று. போஸ்டர் போடு கிறார்களாம், போஸ்ட்டர்! இது என்ன, வாடகை சீன் போட்டாடும் வக்கற்ற கம்பெனி என்று எண்ணிக் கொண் டாரா? நான்தான். செலவு பற்றி யோசிக்கிற கம்பெனி அல்ல இது; போஸ்ட்டர் பிரமாதமான முறையில் இருக்க வேண்டும் என்று பன்னிப்பன்னிச் சொன்னேனே. ராஜபார்ட் என்ற எழுத்தை, இப்படியா கடுகு சைசில் போடுவது? போ! இந்தப் போஸ்டர் வேண்டாம். பெரிய எழுத்தில் ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று போடச் சொல்லு. (சற்று யோசித்து) டே! ராஜபார்ட் என்று மட்டும் அல்லடா, ராஜபார்ட் ராக ஆலாபன ரங்கதுரை பாகவதர் என்று போடச் சொல்லு'-என்று உற்சாகத்துடன் கூறி, கேட் கந்தசாமியை, டிராமா கம்பெனி முதலாளி குருமூர்த்தி அனுப்பிவிட்டு, கம்பெனி மானேஜரைக் கூப்பிட்டனுப்பி விட்டு, 'முருகா! கந்தா!' என்று கூறியவண்ணம் திண்டின் மீது சாய்ந்தார். அவர் சாய்ந்த அதிர்ச்சியால், பக்கத்தி லிருந்த வெள்ளித்தாம்பாளம் ஆடி, அதிலே இருந்த வாச னைப் பாக்குத்தூள், ஜமக்காளத்தின்மீது சிதறிற்று. வேலைக் காரன் வந்ததும், அதைச் சுத்தப் படுத்தச் சொல்லலாம் என்று எண்ணி, அவர் வேறு சில முக்கியமான யோசனையில் ஈடுபட்டார். p கம்பெனிக்கு நல்ல பேர்—புகழ் - வருவாய், பத்திரி கைகளில் பாராட்டுகள்--போட்டோக்கள். இந்த நிலைமை வெறும் எழுத்து வடிவோடு இல்லை-- வெள்ளித் தாம்பாள