பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கதுரை 99 கான சாதகம், புன்னாகவராளிக்கான சாதகம், இவைகளும் அவனுக்கு இல்லை. இலாப நஷ்டக் கணக்குப் பார்த்தான்- சீராகத்தான் இருந்தது. கம்பெனியின் நிலைமையைக் குருமூர்த்தி கணக்கிட்டுப் பார்த்தார்--- அதுவும் சரியாகத்தான் இருந்தது. "குருமூர்த்தி மிகவும் திறமைசாலி. ரங்கதுரை பாகவதர் என்று ஒருவனை ராஜபார்ட்டுக்குத் தயார் செய்தார், எவ் வளவு அருமையாக இருந்தது தெரியுமா? என்னமோ பேதப் பட்டு ரங்கதுரை பாகவதர் விலகிவிட்டார். கம்பெனிக்கும் கொஞ்சம் நஷ்டந்தான்—ஆனால் பார்த்துக் கொண்டே யிருக்கிறார் நல்ல ஆளாகவும், சமயமாகவும் கிடைக்கட்டு மென்று; கிடைத்தால், மற்றோர் ரங்கனைப் பாகவதராக்கு வார்- அவரால் முடியும்” என்று பேசினர். நாடகம் பார்த் தோர், உண்மையிலே, அவரால் முடியும், ரங்கதுரைகளைப் பாகவதராக்க! தன்னை ஏன் பாகவதராக்கவில்லை என்ற வருத்தம், சோமுவுக்கும் தாமுவுக்கும் உண்டு. ஆனால் குருமூர்த்தி என்ன செய்வார்? மோரிலிருந்து தான் வெண்ணெய் எடுக்க முடியுமே தவிர, பன்னீரிலிருந்து கூட எப்படி எடுக்க முடியும்? அதுபோலத்தான்! ரங்கன் கிடைத்தால் பாகவதராக்க முடியும் -சோமுவை அப்படி ஆக்கமுடியாதே! அது அவருக்குத் தெரியும்-சோமுவுக்குத் தெரியாது. ரங்கதுரை பாகவதர்-- பழையபடி- சாதாரண ரங்கன் ஆனான். முன்பு பலபேர், அவனைக் கேட்டதுண்டு, "ஏண் டாப்பா ரங்கா! இவ்வளவு நல்ல சாரீரம் இருக்கும்டோது ஏன் இப்படி மங்கிக் கிடக்கிறாய்-ஏதாவது கம்பெனியில் சேர்ந்தால், பிரமாதமான பேர் வருமே' என்று, அதேபோல மீண்டும் கேட்கலாயினர். "ரங்கு! ஏன் இப்படி உன் திறமை பாழாகும்படி லிட்டு வைக்கிறாய். ராஜபார்ட்டாக இருந் தாய்; இப்போது வெற்றிலை பாக்குக் கடை வைத்துக் கொண்டாயே! நீ தோடி பாடினால், கவலை ஓடிப்போகுமே!