பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

ராஜபார்ட்

காவடிச் சிந்து நீ பாடும்போது,வைஷ்ணவன்கூட சைவனாகி விடலாமா என்று எண்ணுவானே! இவ்வளவு திறமையையும் பாழாக்கிக் கொண்டு, சிசர் வேண்டுமா, வில்ஸ் வேண்டுமா, அசோகா பாக்குத்தூளா, சுகந்த துளா என்று கேட்டுக்கொண்டு, வெற்றிலைக் கடையிலே இருக்கிறாயே. இது சரியா?' என்று கேட்கலாயினர்.

"அது சரிங்க: விஷயம் பெரிது. விளக்கமாகக் கூற, நேரமில்லைங்க! உங்களுக்கு சோடா ஐஸ் போட்டு தரட்டுங்களா? வெறும் சோடாவே போதுமா?" என்று கேட்டுக்கொண்டே, கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தான் ரங்கன்.

வெற்றிலை பாக்குக் கடையிலே, முருகன் வேஷத்திலே எடுத்த போட்டோ, தொங்கிக் கொண்டிருந்தது. கம்பெனியில் ரங்கதுரை பாகவதரின் படம் இல்லை. சோமு, அந்தக் காலி இடத்தில் எந்தப் படம் புகுமோ என்று எண்ணிக் கொண்டிருந்தான். விநாயகர் படத்தைத் தொங்கவிட்டார் மானேஜர்.

கம்பெனிக்கும் நஷ்டமில்லை— குருமூர்த்தியார் கணக்குப்படி.

ரங்கனுக்கும் நஷ்டமில்லை— அவனுடைய நோக்கத்தின்படி.

இடையிலிருந்தோர், ரங்க பாகவதரை, வெற்றிவைக் கடை வைக்கச் செய்து விட்டோம் என்று பூரித்தனர்.

ரங்கனோ, வெற்றிலைக் கடையை நடத்தினால், அதனாலே என்ன? நான் கம்பெனியில் உழைத்தேன். அதனால் அங்கு உயர்ந்தேன். கம்பெனி முதலாளியிடம் மரியாதையும், அன்பும் காட்டினேன்; அதனால் அவர் என்னை ஆதரித்தார்; பாராட்டினார். இப்போது அதே முறையில் நடந்து கொள்கிறேன் இங்கு. அதனால் கடைவீதியில், நாலு பேர் என்னை நல்லவன் என்றுதான் சொல்லுகிறார்கள். இங்கு இருக்க வேண்டிய முறைப்படி, வெற்றிலை வாடாதபடி