இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோகத்திலாழ்ந்திருந்தது கண்ட தனம், "பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆறணாவுக்கு விற்றார்கள். குழந்தைக்கு அகிலாண்டம், பேர்கூட வைத்துவிட்டாள் சரோஜா என்று"—இதை என் மனைவி கூறினதும், என்னையுமறியாமல் என் உடல் குலுங்கிற்று, சரோஜா!—ஆறணா! அங்கு சென்னையிலே நூல் இச்சொல், இங்கே, என் கிராமத்திலே, குடும்பபாரம் தாங்கமாட்டாமல், குழந்தையை விற்ற நெசவாளியின் பெண் குழந்தை சரோஜாவும் ஆறணாவுக்கு விற்கப்பட்டதாகச் சொல் கேட்டேன். என் இருதயம் அனலிடு மெழுகின உருகிற்று.
உருகி என்ன பயன்? உலகம், ஏழைகளின் கண்ணீரைக் கவனிக்கிறதா! இல்லையே!!
24