பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துதித்துத் துதித்து, வாழ்த்தி வாழ்த்தி, என் நாக்குக் தழும்பேறிவிட்டது. மனிதரைப் பஜித்துப் பயனில்லை, மகேஸ்வரனைப் பஜிப்போம்; அவர், தன் மகனிடம், இரக்கம் காட்டாமலிரார் என்று எண்ணி, நாக்குக்கு நிமிடமும் ஓய்வு தராமல் நாமாவளி பாடினோம்; அவரோ நம் குறை தீர்க்க முன்வரவில்லை. என் வேதனைக் குரலைக் கேட்காத செவிகளை அறுத்துவிடவேண்டும், அல்லது, வியர்த்தமாக பஜித்து வரும் என் நாக்கையாவது துண்டித்தெறியவேண்டும். மற்றவரின் செவியை அறுக்க என்னால் முடியாது; ஆண்டவனுக்குள்ளதோ, கருங்கற் செவி, அறுபடாது, உடைபடும்; செய்வதோ சிரமம். அதைவிட, என் நாவைத் துண்டித்துவிடுவதே சுலபம். எதற்கு எனக்கு இந்த நா? கீதம் பாடுகிறேனா? களிப்பு இருந்தால்தானே கானம்! "ஏ! எங்கேயடா மோட்டார் டிரைவர், கூப்பிடு அவனை" என்று அதிகார மொழி பேசப்போகிறேனா? அரை இலட்சந்தான் இந்த ஆண்டு இலாபங் கிடைத்தது என்று இலாபக் கணக்குப் பேசப்போகிறேனா? அருமை மனைவியிடம் ஆனந்தமாகப் பேசுவேனா, குழந்தைகளிடம் கொஞ்சுவேனா? என் நாவின் வேலை இதல்லவே! எதிரே தலை தெரிந்ததும், தர்மப்பிரபுவே! என்று சொல்லவும், பிச்சை கேட்கவும், கோயிற் படியிலே இருந்துகொண்டு கோவிந்தா என்று கூவவுந்தானே இருக்கிறது. இதற்கு ஒரு நா இருக்கவேண்டுமா—என்று எதேதோ எண்ணினான். தன் நாக்கைத் துண்டித்து, கோயிற் படிக்கட்டிலேயே வீசி எறிவது என்று தீர்மானித்தான். இதை அவன் கூறினபோது, ஆண்டிகள் அவன் அது போலச் செய்தேவிடுவான் என்று துளியும் எண்ணவில்லை. அவன் நாக்கைத் துண்டித்துக்கொண்ட செய்தி தெரிந்த போது திடுக்கிட்டு, திருவோடு கீழே விழுவதையுங் கவனியாது, "அடேடே பாவம், விளையாட்டுக்குப் பேசினான்

40