பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டாளியாகக் கொள்வான்; ஆள்வோனுக்கு அடி பணிவான, இவன் பெயர் சீமான்.

எதிர்க்கத் தெரியாத கோழை; இங்கிதம் தெரியாத வாழை; இவன் பெயர் ஏழை'

கூடிப் பேசவும் கும்பிட்டுக் குமுறவும் உள்ள கூடம், கோயில். இது வறியவர் சென்று பார்த்துப் பயன்பெறாது வெளியே வரும், வாயில்! அக்ரமத்தைக் கண்டு அஞ்சி மெய் மறந்தவரே, ஆண்டவன். இவ்விதமான புது அகராதியின் படி பேசினான் பஞ்சை. தனக்குச் சோறு போட மறுத்துக் கோபமாக மோட்டார் ஏறிச்சென்ற சீமானின் மாளிகைக்குச் சென்றான். வெறி கொண்டவன் போலத் தூற்றினான். வேலையாட்கள் பிடித்திழுத்துக் கட்டினர், கம்பத்தில் "சவுக்கெடு!" என்று கூறினார் சீமான். பயமின்றிச் சிரித்தான் பஞ்சை.

"இப்போது கேட்கிறதா உன் செவி, பேஷ்! இது தெரியாமல் இத்தனை நாள் தவித்தேனே. உன்னைப் பூஜித்தேன், துதித்தேன், அப்போது உன்செவி மந்தமாக இருந்தது. இப்போது என் மனமார உன்னைத் திட்டினேன். உன் செவிக்கு அது எட்டிற்றா? சரி! சவுக்கெடுத்து உன் கை வலிக்குமளவு என்னை அடி! பசியைவிடவா, சவுக்கு என்னை அதிகமாக வாட்டமுடியும். உன் கோபத்தைத் தணிக்கக்கூடிய அளவு அடிக்க உன் கரத்திலே வலிவு இராது. அதற்கு எவனாவது ஓர் முரட்டு ஆளைப் பிடி! வேறோர் ஏழை அகப்படுவான், அவனை விட்டு என்னை அடி, அதற்கு அவனுக்குக் கூலி கொடு" என்று பஞ்சை பேசினான், பயமின்றி. அவனுக்குப் பித்தமோ என்று சீமான் சந்தேகித்தான். வேலையாட்களை வெளியே அனுப்பிவிட்டு விசாரித்தான். அந்த ஏழை தன் வேதனையான வாழ்வை-

42