பக்கம்:சேக்கிழார்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 25


பெண்பாற் புலவர்

ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் எல்லா வகுப்பினரும் படித்திருந்தனர்; கவி பாடும் ஆற்றல் பெற்று விளங்கினர். குறவர் மறவர், பாணர் முதலிய வகுப்புப் பெண்களும் சிறந்த பாடல்களைப் பாடினர் ; சேர-சோழ-பாண்டியரால் நன் மதிப்புப் பெற்றனர். பெண் மணிகள் இருவர் செய்யுள் இலக்கண நூல்களைச் செய்தனர் எனின், அக்காலப். பெண்மணிகள் பெற்றிருந்த உயர்ந்த கல்வியை எண்ணிப் பாருங்கள்.

பல தொழிற் புலவர்

நமது நாட்டில் நம் முன்னோர் அறிவுக்காகவே கல்வி கற்றனர். மருத்துவன் தாமோதரனார் என்பவர் ஒரு மருத்துவர். ஆனால் அவ்ர் சிறந்த புலவராக இருந்தார்; அரசர்களிடம் வரிசைகள் பெற்றார். பல வகைத் தானியங்களைக் கடையில் வைத்து விற்று வந்தவர் சாத்தனார் என்ற புலவர். அவர் மணிமேகலை என்னும் காவியத்தைப் பாடினார் : தமிழ் அரசர்களால் நன்கு மதிக்கப் பட்டார். இவ்வாறே கோவூர்க் கிழார் முதலிய வேளாளரும் கல்வி கற்றுப் பெரும் புலவர்களாக விளங்கினர்.

அரசப் புலவர்

நாட்டை ஆளப் பிறந்த அரச மரபினரும் கல்வி கேள்விகளில் சிறந்து இருந்தனர். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/27&oldid=492397" இலிருந்து மீள்விக்கப்பட்டது