பக்கம்:சேக்கிழார்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 33


தேவாரம்

நாயன்மார் பாடி வைத்த தேவாரப் பதிகங்களை இராஜராஜன் முறைப்படுத்தினான் அல்லவா? அந்தப் பதிகங்கள் பனை ஓலையில் இருந்தன. அதனால் பல ஏடுகள் நாளடைவில் அழிந்து விட்டன. இனி அவை அழியாதிருப்பதற்காக வேளாளர் தலைவன் ஒருவன் அவற்றைச் செப்பு ஏடுகளில் எழுதி வைத்தான். பல பெரிய கோவில்களில் தேவார ஏடுகள் பாதுகாக்கப் பட்டன. அவற்றை வைக்க ஒர் அறை, அவற்றைத் தினந்தோறும் எடுத்துப் பூசை செய்து பாட ஒரு மண்டபம் என்பவை பல கோவில்களில் கட்டப் பட்டன. இந்த வேலைகளைச் செய்ய ஒவ் வொரு கோவிலிலும் ஒருவர் அமர்த்தப்பட்டு இருந்தார்.

நாயன்மார் பெயர்கள்[குறிப்பு 1]

இவ்வாறு பொதுமக்கள் நாயன்மார்களைப் பற்றிய பல விவரங்களை அறியத் தொடங்கிய நாள் தொட்டு அவர்கள் தங்கள் பிள்ளைகட்கு நாயன்மார் பெயர்களை இடலாயினர். அக்காலக் கல்வெட்டுகளில் இப்பெயர்கள் காணப்படுகின்றன. ஆண்கள் ஆலாலசுந்தரன், திருஞான சம்பந்தன், திருநாவுக்கரசன், பரஞ்சோதி, கலியன், சிங்கன், கோட்புலி முதலிய (நாயன்மார்) பெயர்களை வைத்துக் கொண்டனர். பெண்கள் மங்கையர்க் கரசி, திருவெண்காட்டு நங்கை, பரவையார்,


  1. நாயன்மார் அறுபத்து மூவர் பெயர்கள் :- 1. கண்ணப்பர், 2. கணம்புல்லர், 3. அரிவாள் தாயர், 4. நமிநந்தி அடிகள், 5. தண்டி அடிகள் 6. கோச்செங்கணச் சோழர், 7 புகழ்ச் சோழர், 8. கூற் றுவர், 9 எறிபத்தர், 10. புகழ்த்துணை, 11. காரைக் கால், அம்மையார், 12. மூர்த்தி, 13 ஐயடிகள் காட் வர் கோன், 14. சண்டேசுவரர், 15. திரு மூலர், 16. சாக்கியர், 17. அமர்நீதி, 18. திருநாவுக்கரசர் 19. திருஞான சம்பந்தர், 20. சிறுத் தொண்டர், 21. திருநீல கண்ட யாழ்ப்பாணர், 22 நீலநக்கர் 23. நெடுமாறர், 24. முருகர், 25. குங்கிலியக்கலயர், 26. மங்கையர்க்கரசியார் 27. குலச்சிறை, 28. அப்பூதி அடிகள், 29. பூசலர், 30. காரி, 31 அதிபத்தர், 32. கலிக்கம்பர், 33. கலியா, 34. சத்தியார், 35. வ்ாயிலார், 36. முனையடுவார், 37. இடங்கழி, 38. இயற்பகை, 39. நேசர், 40. இளையான்குடி 41 மெய்ப்பொருள், 42. திருநாளைப்போவார், 43. ஏனாதிநாதர், 44, ஆனாயர், 45, உருத்திர பசுபதி, 46. திருக்குறிப்புத் தொண்டர், 47. மூர்க்கர், 48. சிறப்புலி, 49. கணநாதர், 50. திருநீலகண்டர், 51. சுந்தரர், 52. சடையனார், 53. இசைஞானியார், 54. நரசிங்கமுனையரையர், 55. கலிக்காமர், 56. மானக் கஞ்சாற்ர், 57. பெருமிழலைக் குறும்பர் 58. கோட்புலி, 59. கழற்சிங்கர், 60. செருத்துணை, 61. சேரமான் பெருமாள், 62. விறல்மிண்டர், 63. சோமாசிமாறர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/35&oldid=492378" இலிருந்து மீள்விக்கப்பட்டது