பக்கம்:சேக்கிழார்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34சேக்கிழார்


திலகவதி முதலிய பெயர்களை வைத்துக் கொண்டனர்.

இவ்வாறு அக்கால மக்கள் தங்கள் பெயர்களை நாயன்மார் பெயர்களாக வைத்துக் கொண்டு வந்தனர் என்பதனால் அவர்கள் சைவ சமயத்தில் கொண்டிருந்த பற்றையும் நாயன்மார் வரலாறு களில் கொண்டிருந்த அன்பையும் நன்கறியலாம் அல்லவா ?


6. அநபாயச் சோழன்

விக்கிரம சோழன்

இவன் நமது அநபாயச் சோழனுக்குத் தந்தை. இவன் கலிங்கம் வரை தன் வீரத்தைக் காட்டிய பெருவீரன். இவன் காலத்தில் சிதம்பரம் மிகவும் சிறப்புப் பெற்றது. இப் பக்திமான் தன் சிற்றரசர் ஒரு வருடத்திற்குக் கட்டிய பகுதிப் பண முழுவதையும் சிதம்பரம் கோவிலை அழகு படுத்துவதில் செலவழித்தான். கோவிலைச் சேர்ந்த பல மண்டபங்கள் புதுப்பிக்கப் பட்டன; கோபுரங்கள் பெரியவையாகக் கட்டப்பட்டன; நடன சபை அழகு செய்யப்பட்டது. நடராசர் தேர் தூய பொன்னால் செய்யப்பட்டது. விலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/36&oldid=492379" இலிருந்து மீள்விக்கப்பட்டது