பக்கம்:சேக்கிழார்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 37


பட்டான். ஒட்டக் கூத்தரும் இப்பெயரையே பல இடங்களில் ஆண்டுள்ளார். அவனால் கோவில்களுக்கு விடப்பட்ட ஊர்கள் ‘அநபாயச் சோழ நல்லூர்’, ‘அநபாய மங்கலம்’ என்று இப்பெயர் கொண்டே விளங்குகின்றன.

சிறந்த சிவ பக்தன்

அநபாயன், தந்தையைப் போலவே, சிறந்த சிவ பக்தனாக இருந்தான். அவன் சிதம்பரத்தில் இருந்த அரண்மனையிலேயே பெரும் பொழுதைப் போக்கினான். நடராஜர் மீது பெரும் பக்தி கொண்டவன். ‘இவன் நடராஜருடைய திருவடிகள் - ஆகிய செந்தாமரையில் உள்ள அருளாகிய தேனைக் குடிக்கும் ஈப் போன்றவன்’ என்று அக்காலத்தார் அவனது பக்தியைப் பாராட்டினர்.

தில்லையில் செய்த திருப்பணிகள்

அநபாயன் தன் தந்தை விட்டுச் சென்ற திருப் பணிகளைக் குறைவற நிறைவேற்றினான்; கோபுரங்கள், சிற்றம்பலம், பல மண்டபங்கள், பிராகார மாளிகை, அம்மன் கோவில் இவற்றை மேலும் அழகு செய்தான். அவனுக்கு முன் இருந்த சோழ அரசர் சிலர் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தனர். ஆதலால் அவன். பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான். ‘பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன்’ என்ற பெயர் பெற்றான்; கோவிலை அடுத்த நான்கு வீதிகளையும் அழகு செய்தான். இவை யாவும் ஒட்டக்கூத்தர் கூறும் செய்திகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/39&oldid=492383" இலிருந்து மீள்விக்கப்பட்டது