பக்கம்:சேக்கிழார்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 39


சபையில் ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் எப்பொழுதும் கூடியிருப்பார்கள். அரசன் அவர்களோடு இலக்கியத் தொடர்பான பல விஷயங்களைப் பேசுவான். பல கேள்விகள் கேட்பான். புலவர்கள் விடையைக் கேட்டு மகிழ்வான். தமிழ்நாடு எங்கணும் இருந்த புலவர்கள் அவனைத் தேடி வருவர். தாம் தாம் பாடிய நூல்களையும் பாக்களையும் அவன் முன் பாடிக் காட்டுவர். அவன் கேட்டு, அவற்றில் தனக்குத் தோன்றிய ஐயங்களைக் கேட்பான்; அவரவர் தகுதிக்குத் தக்கவாறு பரிசில் தந்து அனுப்புவான். இவ்வாறு புலவர்களோடு அளவளாவித் தமிழ்ப் புலவர்களை ஆதரித்த புலமை மிகுந்த சோழர் சிலரே ஆவர்.

அரசன் கேள்விகள்

ஒரு நாள் அநபாயன் தனது சபையில் இருந்தான். அவனைச் சுற்றிலும் புலவர் பலர் கூடியிருந்தனர். அவர்கள் பல நாட்டு விஷயங்களைப் பற்றி அவனிடம் தெரிவித்துக் கொண்டு இருந்தனர். அரசன் ஒவ்வொரு புலவருடைய ஊரைப் பற்றியும் நுணுக்கமாக விசாரிப்பது வழக்கம். அவர் ஊர் - நாடு - அரசன் பற்றிப் பல கேள்விகள் கேட்டு விஷயங்களை ஆவலோடு தெரிந்து கொள்வது அவனது இயல்பு. இவ்வாறு பேசிக் கொண்டிருந்த பொழுது, அவன் புன்னகையுடன் சபையோரைப் பார்த்து-

“புலவர் பெருமக்களே, நான் மூன்று கேள்வி களைக் கேட்கின்றேன். அவை நெடுநாட்களாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/41&oldid=492385" இலிருந்து மீள்விக்கப்பட்டது