பக்கம்:சேக்கிழார்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44சேக்கிழார்


“தொண்டை நாட்டுப் பெரும் புலவராகிய அருள்மொழித் தேவர் இன்று முதல் நமது சோழப் பெருநாட்டு முதல் அமைச்சராக இருப்பார். நான் அவருக்கு உத்தம சோழப் பல்லவராயர் என்னும் பட்டத்தை மனமுவந்து அளிக்கிறேன்!”

என்று கூறி அவர் கழுத்தில் மலர் மாலை அணிவித்தான். அவையோர் அனைவரும் அரசன் பேச்சை வரவேற்று மகிழ்ந்தனர்.


8. சேக்கிழார் தல யாத்திரை

நல்லவர் நட்பு

‘நல்லவர் நட்பு நாள்தோறும் வளர்கின்ற சந்திரனைப் போல் வளரும்’, என்பது பெரியோர் வாக்கு. சிறந்த சிவ பக்தரும் பெரும் புலவரும் அரசியல் அறிஞரும் ஆகிய சேக்கிழார் அரச சபையில் இருந்த அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தார். அவரது நல்ல ஒழுக்கம், அடக்கமான பேச்சு, அருள் நிறைந்த பார்வை, அன்பு கனிந்த உள்ளம் முதலிய பண்புகள். சோழ அரசனைப் பெரிதும் கவர்ந்தன. அவன் அவரிடம் அளவற்ற மதிப்புக் கொண்டான்.

இளவரசன்-இராஜராஜன்

அநபாயன் தவ மைந்தன் இரண்டாம் இராஜ ராஜன். அவன் ஒட்டக்கூத்தர் மாணவன் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/46&oldid=491958" இலிருந்து மீள்விக்கப்பட்டது