பக்கம்:சேக்கிழார்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 45


அவன் சேக்கிழாருடைய புலமையையும் பக்தி யையும் கண்டு மனம் களித்தான்; அவருடைய அரசியல் அறிவைக் கண்டு வியந்தான்; அவருடன் நெருங்கிப் பழகலானான். சேக்கிழாரும் இராஜ ராஜனுடைய நல்ல இயல்புகளைக் கண்டு, அவணுடன் நெருங்கிப் பழகினார். சோழ அரச பரம் பரை பற்றிய பல செய்திகளையும் அரசியல் செய்தி களையும் பற்றி அடிக்கடி அவனிடம் பேசுவார் ; திருக்கோவில்களைப் பற்றியும் சைவ சமய வளர்ச்சி யைப் பற்றியும் அவனிடம் விரிவாகப் பேசுவார்.

ஒட்டக்கூத்தர்

அரசனான அநபாயச் சோழனுக்கும் இளவரசனான இராஜராஜனுக்கும் ஆசிரியரான பெரும் புலவர் யார்? ஒட்டக்கூத்தர் அல்லவா? சேக்கிழார் அமைச்சராக வந்தபொழுது ஒட்டக்கூத்தர் அவரினும் வயது முதிர்ந்தவராக இருந்தார். அப்பெருமான் சேக்கிழாரது பேரறிவைக் கண்டு மகிழ்ந்தார்; மற்ற நல்ல இயல்புகளைக் கண்டு பாராட்டினார். சேக்கிழாரும் அப்பெரியவரிடம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் காட்டி நடந்து வந்தார். இரு பெரும் புலவரும் மன மகிழ்ச்சியோடு பல செய்திகளைப் பற்றி விவாதிப்பது வழக்கம்.

சேக்கிழாரும் அரச சபையும்

சோழப் பெருநாட்டில் சிற்றரசர் பலர் இருந்தனர். அவர்களுடைய பிரதிநிதிகள் அரச சபையில் நாள்தோறும் கூடுவது வழக்கம். அமைச்சர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/47&oldid=491959" இலிருந்து மீள்விக்கப்பட்டது