பக்கம்:சேக்கிழார்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46சேக்கிழார்


சேனைத் தலைவர்கள், அரசாங்கப் பிரிவுகளின் உயர்ந்த உத்யோகஸ்தர்கள், நகரப் பெருமக்கள் முதலியவர் நாள்தோறும் அரச சபையில் கூடுவர். அவர்கள் அனைவரும் சேக்கிழாருடன் பழகி அவரிடம் மிகுந்த பற்றுக் கொண்டனர்; அவரது காலத்தில் சோழப் பெருநாடு மிக்க சிறப்படையும் என்று நம்பினர். இங்ஙனம் சேக்கிழார் அரசன் முதல் ஆண்டி ஈறாக இருந்த எல்லார் உள்ளத்தையும் தம் நல்ல இயல்புகளினால் கவர்ந்து மிக்க சிறப்புடன் முதல் அமைச்சராக இருந்து வந்தார்.

சோழ நாட்டுத் திருநாகேசுவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்து திருநாகேசுவரம் என்னும் சிவத்தலம் இருக் கின்றது. அது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். அங்குள்ள கோவில் மிகப் பெரியது. சேக்கிழார் அக்கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசிப்பது வழக்கம். அக்கோவில் எவ்வாறோ அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவருடைய தாயார், தம்பியார் பாலறாவாயர் ஆகிய இருவரும் அக் கோவிலுக்குச் சென்று வழிபடலாயினர். இதற்கு அடையாளமாக அக் கோவிலில் அவர்கள் மூவர் சிலைகளும் இருக்கின்றன.

தொண்டை நாட்டு திருநாட்டுத் திருநாகேசுவரம்

சேக்கிழார் தமது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேசுவரம் கோவிலைப் போன்ற ஒன்றைக் கட்ட விரும்பினார்; சோழ நாட்டுத் திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/48&oldid=491987" இலிருந்து மீள்விக்கப்பட்டது