பக்கம்:சேக்கிழார்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48சேக்கிழார்


கோவில் நிர்வாகம், விவசாய வரி, தொழில் வரி முதலிய பல பொருள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பர் ; மேற்பார்வை இடுவர் ; குறைகளை நீக்குவர். இத்தகைய அரசியல் விவரங்களை அறிவதற்காகவே சேக்கிழார் நாடு முழுவதும் சுற்றலானார்.

அக்காலப் பாதைகள்

பிள்ளைகளே, இக்காலத்தில் நமது மாநிலத்தில் பல ஒழுங்கான பாதைகள் அமைந்திருக்கின்றன. சென்னை போன்ற பெரிய நகரங்களில் தார் போட்ட சாலைகள் இருக்கின்றன. சென்னையிலிருந்து வடக்கேயும் தெற்கேயும் மேற்கேயும் செல்வதற்கு அகன்ற பெரிய சாலைகள் ஒழுங்காக அமைக்கப் பட்டுள்ளன. அப்பாதைகள் வழியே லாரிகள், பேருந்துகள், பிற பிரயாண வண்டிகள் முதலியன பல நூறு கி.மீ. பிரயாணம் செய்கின்றன.

இத்தகைய ஒழுங்கான முறையில் அக்காலத் தில் பாதைகள் இருந்தன என்று கூறலாம். வடுக வழி கிழக்கு என்று ஒரு பெரிய பாதை தெலுங்க நாட்டுக்குச் சென்றது; வடுகல்ழி மேற்கு என்று ஒரு பெரிய பாதையும் வட மேற்குத் திசையில் சென்றது. காவிரி, கொள்ளிடம் முதலிய ஆற்றங்கரைகளை அடுத்துப் பெரிய பாதைகள் சென்றன. அப்பாதைகள் வழியாகத்தான் ஒரு நாட்டு மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/50&oldid=491962" இலிருந்து மீள்விக்கப்பட்டது