பக்கம்:சேக்கிழார்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 49

பிற நாட்டு மக்களுடன் வாணிகம் செய்தனர் வாழ்க்கையில் உறவு கொண்டாடினர்.

உதாரணமாகக் காவிரியாற்றை எடுத்துக் கொள்வோம். அது மேற்கே குடகு மலைப் பிரதேசத்தில் உற்பத்தியாகிறது. அதன் கரை வழியே வரும் ஒருவன் குடகு நாட்டையும், மைசூர் நாட்டையும், பிறகு கொங்கு நாட்டையும், அதன் பிறகு சோழ நாட்டையும் எளிதில் அடையலாம் அல்லவா? வளமான இத்தகைய ஆற்றங்கரை களில்தான் நகரங்கள் அமைதல் இயல்பு. நாகரிக மக்கள் அங்குதான் மிகுதியாக வசிப்பார்கள்; எனவே கோவில்களும் ஆற்றங்கரையோரமே பலவாகக் கட்டப்படும்.

ஒர் ஆற்றுக்கும் மற்றோர் ஆற்றுக்கும் இடைப் பட்ட நிலப் பகுதியில் குறுக்குப் பாதைகள் உண்டாகும். மேலும், அக்காலத்தில் காசியில் இருந்து இராமேசுவரம் வரை யாத்திரை செய்யத் தக்க நல்ல பாதை இருந்தது. நம் தேவார ஆசிரியர் மூவரும் வடக்கே காளத்தி வரை தல யாத்திரை செய்து, பதிகங்களைப் பாடியுள்ளனர். இராஜ ராஜன், இராஜேந்திரன் முதலான சோழப் பேர்ரசர் படைகளைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதால், அப்படைகள் செல்லத் தக்க ஒழுங்கான பாதைகள் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறதல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/51&oldid=491963" இலிருந்து மீள்விக்கப்பட்டது