பக்கம்:சேக்கிழார்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56சேக்கிழார்


கல்வி கற்றல்

ஐந்து ஆண்டுகள் ஆயின. சீவகன் பள்ளியில் விடப்பட்டான். ஒரு நாள் அச்சணந்தி என்ற முனிவர் வணிகன் வீட்டிற்கு வந்தார்; சீவகனைக் கண்டார்; அவன் தெய்வீகச் சிறுவன் என்று எண்ணினார். அவனுக்குக் கலைகளைப் போதிக்க விரும்பினார். சீவகன் வணிகனிடம் சென்ற பிறகு அவ் வணிகனுக்கு ஒர் ஆண் மகவு பிறந்து வளர்ந்தது. அப் பிள்ளையும் முனிவரிடம் கல்வி கற்கலானான்.

சீவகன் தரும சாஸ்திரங்களைக் கற்றான்; மற்போர், வாட்போர், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் முதலிய பயிற்சிகளில் தேறினான். அடக்கம், பெரியோரிடம் மரியாதை, கற்றவரிடம் கனிவு, எளியவரிடம் அன்பு முதலிய நல்ல பண்புகள் அவனிடம் இருந்தன. அதனால் அவனுடன் பழகிய பிள்ளைகள் அவனைத் தங்கள் தலைவனாகக் கொண்டாடினர். ஆசிரிய முனிவரும் வளர்த்த வணிகனும் அவனிடம் பேரன்பு காட்டினர்.

காளைப் பருவம்

சீவகன் பதினெட்டு வயதுடைய காளை ஆனான். அதற்குள் அவன் அரசர்க்குரிய கல்வியையும் போர்த் துறைகளையும் நன்றாக அறிந்திருந்தான். ஒரு நாள் முனிவர் அவனுக்கு அவனது வரலாற்றை விளக்கமாகக் கூறினார். காளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/58&oldid=1085373" இலிருந்து மீள்விக்கப்பட்டது