பக்கம்:சேக்கிழார்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58சேக்கிழார்


பெற்றவன். ஆதலால் அவன் தன் திறமையைக் காட்டிக் காந்தர்வதத்தையை யாழ்ப் போட்டியில் வென்று மாலை சூட்டினான்.

பட்டம் பெறுதல்

இவ்வாறு சீவகன் தன் ஆற்றலைக் காட்டி மங்கையர் எழுவரை மணந்தான்; இறுதியில் கட்டியங்காரனைக் கொன்றான்; தந்தை இருந்த அரியணையில் அமர்ந்து இனிதாக அரசு செலுத்தினான். இவ் வரலாறு நூல் முதலிலுருந்து முடிவுரை வரை இன்பமாகவே இருக்கும்.


10. சேக்கிழார் அறிவுரை

சேக்கிழாரும் இராஜராஜனும்

சேக்கிழார் சீவகசிந்தாமணியை நன்றாகப் படித்தவர்; அதன் காவியச் சிறப்பை நன்கு அறிந்தவர்; ஆயினும் அரச சபையில் அதனை மிகுதியாக வெளிக்காட்டவில்லை. அரசன் அக் காவியத்தில் தன் கருத்தைச் செலுத்தினான்; சில பகுதிகளை இரண்டு மூன்று முறை வாசிக்கச் சொல்லிக் கேட்டு இன்பப்பட்டான்.

ஒரு நாள் மாலை இளவரசன் சேக்கிழாரை அழைத்துக் கொண்டு உலவச் சென்றான். இருவரும் ஒரு பூஞ்சோலையில் எதிர் எதிர் அமர்ந்தனர். அரண்மனையைச் சேர்ந்த அப் பூந்தோட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/60&oldid=491975" இலிருந்து மீள்விக்கப்பட்டது