பக்கம்:சேக்கிழார்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 63


பிறந்து வாழ்ந்த ஊர்களில் கூறப்படும் வரலாற்றுச் செய்திகளையும் இணைத்தால் விளக்கமான வரலாறு கூற முடியும்,” என்றார்.

அநபாயன் வியப்புக் கொண்டான். அவன் அமைச்சரை நோக்கி, ‘ஐயனே, உமது யோசனை நல்லதே. ஆயின், இவ்வளவு அரும் பாடுபட்டு நாயன்மார் வரலாறுகளைத் தொகுப்பவர் யாவர்? இவ்வரிய வேலைக்குப் பல ஆண்டுகள் வேண்டும். பொறுமையும் சமயப் பற்றும் வேண்டும். தமிழ் நாடு முழுவதும் சுற்ற வேண்டுமே!’ என்று கூறினான்.

அமைச்சர், பெருமானே, நான் தங்களிடம் அமைச்சனாக வந்த நாள் முதல் இந்த வேலையில் ஈடுபட்டேன்; என்யாத்திரைகளில் எல்லாத் தலங்களையும் சுற்றிப் பார்த்தேன்; குறிப்புகள் சேகரித்தேன்; பின்னர் ஓய்வு நேரங்களில் அவற்றை முறைப்படுத்தி வைத்திருக்கிறேன்!” என்று பதில் உரைத்தார்.

நாயன்மார் வரலாறுகளைக் கேட்டல்

அந்தப் பதிலைக் கேட்டு அநபாயன் ஆச்சரியம் கொண்டான். “என்ன, நாயன்மார் வரலாறுகளை ஆராய்ந்து முறைப்படுத்தியிருக்கிறீர்களா? எங்கே, கூறுங்கள், கேட்போம்!” என்று மிக்க ஆவலுடன் கூறினான்.

சேக்கிழார் மாதிரிக்காக ஓர் அடியார் வரலாற்றை விளக்கமாக உரைத்தார். அரசன் ஆனந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/65&oldid=492366" இலிருந்து மீள்விக்கப்பட்டது