பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 89 சேக்கிழாரின் மனு நீதி எத்துணை அன்பும் கருணையும் இரக்கமும் கண்ணோட்டமும் உடையனாயினும் அந்தப் பசுவின் துயரத்தை அரசன் எவ்வாறு போக்க முடியும்? அரச குமாரனுக்குப் பாவம் சேராதிருக்கக் கழுவாய் செய்யலாம் என்று அமைச்சர்கள் அறவுரை பகர்கின்றனர். ஆனால், அத்தமிழ் மன்னன் அவர்கள் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை எள்ளி நகையாடுகிறான். காரணம், ஒரு திருக்குறள்தான். அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை (குறள்-35) பிற உயிருக்கு வரும் துன்பத்தைத் தன்னுயிர்க்கு வந்ததுபோலக் கருதிக் குறிக்கொண்டு காவா விட்டால் அறிவு என்ற ஒன்றைப் பெற்று இருப்பதால் பயன்தான் என்ன என்பதே இதன் பொருள். பிற உயிருக்கு வந்த துயரத்தைப் போக்க முடியாதவன் அத்துயரைத் தானும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டும். இதனையே குறள் போற்றி என்கிறது. அப்பொழுதுதான் வருந்தும் அந்த உயிரின்