பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 91 "ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான்என்பதும் 'உணரான் 'தருமம் தன் வழிச்செல்கை கடன்' என்று - தன்மைந்தன் மருமம் தன் தேர்ஆழி உற ஊர்ந்தான் மனுவேந்தன்.” (பெ. பு-129) எனச் சேக்கிழார் கூறுகிறார். நிகழ்ச்சி ஒன்று காட்சி வெவ்வேறு எதிர்பாராத ஒரு தீமை நிகழ்ந்துவிட்டது. அதனை மன்னன், அமைச்சர்கள் ஆகிய இரு திறத்தாரும் அறிகின்றனர். எனினும், அமைச்சர்கள் அத் தீமையைக் காணும் விதம் வேறு மன்னன் அதனைக் காணும் விதமே வேறு. சட்டம் மக்கட்குச் செய்யப் பெறும் தீங்குகள்பற்றியே வகுக்கப்பெற்றுள்ளது. ஆனால், இங்குத் தீங்குற்றது மனித உயிரன்று. ஒரு பசுங் கன்றேயாகும். GTopёбтиш உயிர்கட்கு இழைக்கப்டும் தீங்கைக் காட்டிலும் பசுவுக்கு இழைக்கப்படும் தீங்கு கொடுமையானது என்பதை அந்நாளைய தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தனர். எனினும், மனித உயிருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பசுவின் உயிர் சமமாக வைத்து எண்ணப் படுவதொன்றன்று. அப் பசுங்கன்றையும் வேண்டு மென்றே அரசகுமாரன் வதைசெய்யவில்லை.