பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சேக்கிழார் தந்த செல்வம் எதிர்பாராமல் நடைபெற்ற நிகழ்ச்சியாகும் இது. மூன்றாவதாக, குற்றம் நடைபெற்ற இடமும் ஆராயற்பாலது. அரசகுமாரன் உலாவருதற்குரிய வீதியாகும் அது; பசுங்கன்று அங்கே வர உரிமையே இல்லை எனலாம். நான்காவதாக, அப்பசுங்கன்றை அரசகுமாரன் கவனித்துத் தேரை நிறுத்த வாய்ப்பே இல்லை. மிக உயர்ந்த தேரின்மேல் வரும் அவன், பசுங்கன்றைக் கவனிக்கவே முடியாது. ஆகலின், கவனக்குறை என்ற குற்றத்தையும் அவன்மேல் சுமத்த முடியாது. ஐந்தாவதாக, அரசகுமரனின் தேரைச் சுற்றி நால்வகைப் படையும் செல்கின்றன. எனவே, இடையே புகுந்த கன்றைப் பிடித்து நிறுத்தும் கடமை அவர்களையே சாரும். இந்த ஐந்து காரணங்களால் அரசகுமரன்மேல் குற்றமே இல்லை 6 TGÖT அமைச்சர்கள் கருதுகின்றனர். இவை அனைத்தையும் மனத்துட் கொண்ட அமைச்சர், அரச குமரன்மேல் குற்றமே இல்லை’ என்ற முடிவுடன், அவனை அறியாமல் நிகழ்ந்த பாவத்திற்குமட்டும் பிராயச்சித்தம் செய்ய வேண்டு மெனக் கூறுகின்றனர். மனிதன் இயற்றிய சட்டப்படி அவர்கள் கூற்றுச் சரியானதே. ஆனால், அறச் சட்டத்தின்படி பார்த்தால் இறந்தது மனித உயிரா, அன்றிப் பசுங்கன்றா என்ற வினாவுக்கு இடமே இல்லை. இறந்தது ஓர் உயிர். இறைவனால்