பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சேக்கிழார் தந்த செல்வம் என்றுஅரசன் இகழ்ந்துஉரைப்ப எதிர்நின்ற மதி - <945@LD于母町 “நின்றநெறி உலகின்கண் இதுபோல்முன் நிகழ்ந்ததால் பொன்றுவித்தல் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல் தொன்றுதொடும் நெறியன்றோ? தொல்நிலங்காவல!” என்றார். (பெபு:123) இவ்வாறு செய்வதே பழைய முறை என்றும் அதுவே சட்டம் எனறும் அதுவே வழக்கு என்றும் மரபு என்றும் சட்டங்கற்ற மதிஅமைச்சர் பேசுகின்றனர். அதிலும் மரபுக்கு (custom அதிக மதிப்புத் தந்து பேசுகின்றனர். இன்றும் சட்ட முறையில் எழுத்துச் சட்டத்தினும் வலிமையுடையது ւDITւլ என்பதை அறிதல் வேண்டும். மானிடச் சட்டத்துடன் அறச் சட்டத்தையும் அறிந்திருந்த அரசன் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். "நீங்கள் இதுபோல் முன்னர் நடை பெற்ற குற்றத்திற்கு இதுவே முறை என்று கூறுகிறீர்கள். ஆனால், இதே குற்றம் முன்னர் எப் பொழுது நடைபெற்றது? மனிதச் சட்டத்தை அறியாது பேசுகிறீர்கள். எந்த உலகத்தில், எந்தப் பசு, இப்படி ஒரு துயரை அடைந்து, இப்படி வந்து கதறிக்கொண்டு ஆராய்ச்சி மணியை அடித்தது? இத்தகைய ஒரு நிகழ்ச்சி முன்னர் நடைபெற வில்லையாகலின் நீங்கள் கூறும் மனிதச் சட்டத்தில்