பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 95 இதனைத் சுேடிப் பயனில்லை’ என்ற கருத்தில் அரசன் பேசுகிறான். சேக்கிழார் கூற்றைப் பாருங்கள்: "அவ்வுரையில் வருநெறிகள் அவைநிற்க. அறநெறியின் செவ்விய உண்மைத் திறம் நீர்சிந்தைசெயாது உரைக்கின்றீர் எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித்தாம் இடரால் வெவ்வுயிர்த்துக் கதறிமணி எறிந்துவிழுந்தது” விளம்பீர். - (பெ. பு-25) இந்த இடத்தில் சற்று நின்று ஆராய வேண்டும். நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள்முக்கியத் துவம் கொடுக்கும் இடம் வேறு: மன்னன் முக்கியத் துவம் கொடுக்கும் இடம் வேறு. அமைச்சர்களைப் பொறுத்த மட்டில் பசுமாடு மணி அடித்துக் கதறுவது ஒரு பொருட்டாகவே கருதப் பெறவில்லை. பசுக் கொலைதான் அவர்கள் கவனத்தில் இருக்கிறது. இதுபோன்ற பசுக்கொலை முன்னரும் நிகழ்ந்த துண்டு. எனவே, பசுக்கொலை செய்தால் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற குறிக் கோளிலேயே அவர்கள் நின்றுவிட்டனர். - பிறந்த உயிர்கள் அனைத்தும் இறந்தே தீரல் வேண்டு மாகலின் பசுங்கன்றின் இறப்பை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இயல்பான «5FfГ6/FT&96 இல்லாமல் கொலை நடைபெற்றதாகலின் கொலைக்குத் தண்டனை வழங்க வேண்டும்.